புதன், 11 டிசம்பர், 2013

கோல் இந்தியா நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம்

தரமற்ற நிலக்கரியை சப்ளை செய்ததற்காக COAL INDIA நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் பெரும்பாலான நிலக்கரியை வெட்டி எடுக்கும் நிறுவனம் COAL INDIA. மத்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் அரசு கொள்கைகள் காரணமாக போட்டியே இல்லாமல் மோனோபோலியாக இருந்து வந்தது. இதனால் இந்த நிறுவனத்தின் சேவைகளும் தரம் இல்லாமல் இருந்து வந்தது.


மகாராஷ்டிரா, குஜராத் மின் உற்பத்தி நிறுவனங்கள் தரமற்ற நிலக்கரியை சப்ளை செய்ததற்க்காக புகார் தெரிவித்தன.

இதனை விசாரித்த வியாபர கண்காணிப்பு நிறுவனமும், போட்டியாளர்களைக் கட்டுப்படுத்தும் மத்திய  அமைப்பும் சேர்ந்து COAL INDIA நிறுவனத்துக்கு 1773 கோடி அபராதம் விதித்துள்ளது.

இது வரலாற்றிலே அரசு நடத்தும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதமாகக் கருதப்படுகிறது.

தறிகெட்டு ஓடும் பூனைக்கும் ஒரு கடிவாளம் தேவை தான்!

முதலீடு தொடர்பான எமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: