புதன், 18 டிசம்பர், 2013

உலக அரங்கில் கேலியாகும் இந்திய அரசின் நியாயம்

கடந்த சில நாட்களாக தேவயானி பிரச்சினையை படிக்காமல் விட்டு விட்டேன். இன்றைக்கு தினமலர் பார்த்தால் நம்ம சல்மான் குர்ஷீத் தேவயானியை மீட்காமல் நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்கிறார்.


அப்படி என்னப்பா இந்த தேவயானி சேவை பண்ணிட்டாங்க.. நாடாளுமன்றத்தில் குதி குதின்னு குதிக்கிறாங்க என்று விவரத்தை தேடினா...இந்திய அரசும், கட்சிகளும் மக்களை எவ்வளவு முட்டாளாக்கப் பார்க்காங்கன்னு புரியுது..

இதாங்க நமக்கு தெரிஞ்ச விஷயம்..

தேவயானி ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு அழைத்து செல்கிறார். சம்பளம் 4500 US$ என்று சொல்லி முப்பதாயிரம் ரூபாய் மட்டும் சம்பளம் கொடுக்கிறார். அதன் பிறகு சம்பள பாக்கி இருந்ததால் அந்த பெண் புகார் கொடுக்கிறார். இது தவிர போலி தகவல்களை கொடுத்து விசா பெற்று இருக்கிறார் என்பதும் ஒரு கூடுதல் குற்றச்சாட்டு.இது தவிர வேற ஏதாவது தெரிஞ்சா நீங்கள் பின்னூட்டத்தில் பகிருங்க..

நேற்று நடு ரோட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்..குழந்தைகள் முன் வைத்து கைது செய்யப்பட்டார், சோதனை செய்யப்பட்டார்.. என்பது தான் இந்திய அரசின் குற்றச்சாட்டு,

ஆனால் முந்தைய பத்தியில் உள்ள  தேவயானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு இந்திய அரசிடம் எந்த பதிலும் இல்லை..

இதில் புகார் கொடுத்தது கூட இந்தியப் பெண் தான்..

இதற்காக ராஜாங்க ரீதியாக முறுக வேண்டிய அவசியம் என்ன? அப்துல் கலாம் உட்பட பலர் மீது சோதனை போட்ட போது அமைதியாக இருந்த இந்திய அரசு இப்ப துள்ளிக் குதிக்க என்ன காரணம் என்றே புரியவில்லை..

ரோட்டை தோண்டுறது, ஐடி கார்டு பிடுங்கிறது என்பது கொஞ்சம் சின்னப்பிள்ளைத் தனமாகவே தெரியுது..

இந்திய மீனவர்கள் கடல் எல்லை என்னவென்று தெரியாமல் தாண்டி விட்டால் சுட்டுக் கொன்றுவிடுவார்கள். அப்பொழுதெல்லாம்.அமைதியாக இருந்து நீங்க எல்லையைத் தாண்டுனா சுடத் தான் செய்வாங்க என்று கூறிய அதே அரசு ஒரு குற்றம் சாட்டப்பட்ட பொண்ணுக்காக  அமெரிக்காவுடன் சண்டை போடுறது ஏன் என்று புரியவில்லை.

ஒரு வேளை தேர்தல் திசை திருப்புதலா?
நடாளுமன்ற கூட்டமோ?
ஒன்னும் தெரியவில்லை..

இதுல ஐக்கிய நாட்டு சபை தூதர் பொறுப்பு கொடுத்து ஒரு குற்றவாளி பெண்ணைக் காப்பாற்ற முயலுவது அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்..

ஒரு வேளை போபால் விஷவாயு குற்றவாளியை நாங்க தனி விமானத்துல உங்க நாட்டுக்கு அனுப்பி வைத்தோம். அது போல நீங்களும் பண்ணனும் என்று இந்திய அரசு எதிர் பார்க்கிறதோ?

 
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்:

 1. boss neenga sariya padikama itha ezutharenga. mothalla antha lady kanama poyi evalavu nall aguthu ithu ellam GC vangarathukaga antha lady pannarathu mathiri irruku above all thaey have arrested her like criminal not like other country embassy staff

  பதிலளிநீக்கு
 2. ஒரு வேளை போபால் விஷவாயு குற்றவாளியை நாங்க தனி விமானத்துல உங்க நாட்டுக்கு அனுப்பி வைத்தோம். அது போல நீங்களும் பண்ணனும் என்று இந்திய அரசு எதிர் பார்க்கிறதோ?// இதுதான் உண்மை.

  இங்கு பிரச்சனையே இந்தியாவின் மானப்பிரச்சினை மட்டும்தான் இந்திய மக்களைபற்றியெல்லாம் இல்லை. ஆயிரம் இந்திய கூலிகளை அமெரிக்கர்கள் நடுரோட்டில் வைத்து சுட்டிருந்தாலும் இந்தியா ஏன் என்று கேட்டிருக்காது.

  பதிலளிநீக்கு
 3. Replies to,//Anonymous said... boss neenga sariya padikama itha ezutharenga. mothalla antha lady kanama poyi evalavu nall aguthu ithu ellam GC vangarathukaga antha lady pannarathu mathiri irruku above all thaey have arrested her like criminal not like other country embassy staff //

  Thanks for your comments! I think for your comment, புரட்சி தமிழன் reply will be the answer..Just for diverting, Govt is acting like this..

  பதிலளிநீக்கு
 4. உலகிலேயே அமெரிக்காதான் பெண்களுக்கும் குழந்த்தைகளுக்கும் பாதுகாப்பு தருவதில் முதல் இடம் வகிக்கின்றது. பெண்களை திருமனம் முடித்து வெறும் போகப்பொருளாக மட்டுமே நினைத்து அனுபவித்து நினைத்த மாத்திரத்தில் திருமன ரத்து செய்ய முடியாது. அப்படி ரத்து செய்தால் மனைவிக்கு அவனது சொத்தில் பெரும் பகுதியை கொடுக்கனும். அவள் எந்தமாதிரி வாழ்க்கையை வாழ்ந்திருநாளோ அதே வாழ்க்கை தரத்தை திருமனத்துக்கு பின்னும் உறுதி செய்யனும்.
  அங்கு விவாகரத்து சகஜாமானதால் வளர்ப்பு குழந்தைகளின் துன்புறுத்தல் காரனமாக குழந்தை பாதுகாப்பு சட்டம் கடுமையாக உள்ளது.

  ஒரு பென்னை வீட்டு வேலை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வருவது எந்த ஊர் நியாயம்?. இதைச்செய்தது அமெரிக்கரே ஆனாலும் சட்டம் சும்மா விடாது.

  தேவயானியின் குற்றத்துக்கு இநிய அரசாங்கம் நியாம் கற்ப்பிப்பது இந்தியாவிற்கு கேலி சேர்க்கும் அவமானமான வேலையாகும்.

  பதிலளிநீக்கு
 5. தங்கள் கருத்துகளுக்கு நன்றி புரட்சி தமிழன்!

  பதிலளிநீக்கு
 6. தங்கள் வருகைக்கு நன்றி உசிலை விஜ‌ய‌ன்!

  பதிலளிநீக்கு