புதன், 1 ஏப்ரல், 2015

Debt-To-Equity விகிதம் கணக்கிட ஒரு கால்குலேட்டர் (ப.ஆ - 40)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் ஒரு கட்டுரையில் DEBT RATIO: கடனை எளிதாக மதிப்பிட உதவும் அளவுகோல் (ப.ஆ - 36) என்ற தலைப்பில் எழுதி இருந்தோம். அந்த விகிதத்தை எளிதாக கணக்கிட ஒரு கால்குலேட்டர் தருகிறோம்.




ஒரு பங்கினை தேர்ந்தெடுக்கும் போது நிறுவனம் எந்த அளவு கடனில் உள்ளது என்பதை தெரிந்து முதலீடு செய்வது அவசியமாகும்.

கடன் அதிக அளவு இருந்தால் வட்டி கட்டியே நிறுவனத்தின் லாபம் கரைந்து போய் விடும். அதனால் நமது முதலீடுகளும் கரைந்து போய் விடும்.

ஒரு நிறுவனம் கடனில் எந்த அளவு மூழ்கி உள்ளது என்பதை நேரடியாக கவனிக்க Debt-To-Equity விகிதம் பெரிதும் உதவும்.

முழு விவரங்களுக்கு DEBT RATIO: கடனை எளிதாக மதிப்பிட உதவும் அளவுகோல் என்ற கட்டுரையை பார்க்கலாம்.

இதற்காக ஒரு கால்குலேட்டர் ஒன்றை தற்போது எமது stockcalculation.com என்ற பங்கு கால்குலேடர் தளத்தில் இணைத்து உள்ளோம்.

இணைப்பு இங்கே.
http://www.stockcalculation.com/2015/04/debt-to-equity-calculator.html

எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான செயல்முறை விளக்கம் கீழே உள்ளது.
  • முதலில் நிறுவனத்தின் Balance Sheet சென்று பார்க்கவும்.
  • அதில் Total Networth என்ற பகுதியில் கிடைக்கும் மதிப்பை கீழே படத்தில் உள்ளவாறு Total Equity Capital என்றவற்றில் உள்ளீடு செய்யவும்.
  • அதை போல Total Debt என்பதையும் உள்ளீடு செய்யவும். 
  • அதன் பிறகு Calculate என்ற பட்டனை அழுத்தவும்.

பட்டனை அழுத்திய பின் கடன் விகித மதிப்பு மற்றும் நிறுவனம் எந்த நிலையில் உள்ளது என்பதை கால்குலேட்டர் தானாக சொல்லும்.

கீழே உள்ள படத்தில் AEGIS Logistics என்ற நிறுவனம் உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Balance Sheet விவரங்கள் Moneycontrol.com என்ற இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பெரிதாக்க கிளிக் செய்யவும் 
இணைப்பு இங்கே.
http://www.stockcalculation.com/2015/04/debt-to-equity-calculator.html

'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரில் வெளியாகும் ஒவ்வொரு சூத்திரங்களுக்கான கால்குலேட்டர்கள் மெல்ல stockcalculation.com தளத்தில் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். கணினியின் மூலம் விரைவாக கணக்கிட இந்த கால்குலேட்டர்கள் உதவும்.

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின்அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .

  • பென்னி ஸ்டாக் என்றால் பயந்து ஓடுவதன் காரணங்கள் (ப.ஆ - 41)

    தொடர்பான பதிவுகள்:

  • « முந்தைய கட்டுரை




    Email: muthaleedu@gmail.com

    1 கருத்து: