செவ்வாய், 20 அக்டோபர், 2015

மீண்டும் வரும் மேகி, என்ன சோதனைகளோ?

நெஸ்லே நிறுவத்தின் மேகி ஆறு மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக வேதியியல் பொருட்கள் இருப்பதாக கூறி தடை செய்யப்பட்டது.


அப்பொழுதே ஒவ்வொரு ஆய்வகங்களிலும் ஒவ்வொரு ரிசல்ட் சொல்லப்பட்டது.



ஆனாலும் நெஸ்லே பங்கு கீழே வரவில்லை.

ஏதாவது செய்து எப்படியும் மேலே கொண்டு வந்து விடுவார்கள் என்று முதலீட்டாளர்கள் நம்பி இருந்தனர்.  இந்திய நீதி துறை, உணவு கட்டுப்பாட்டு துறைகள் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்து வந்தது.

ஆறு மாதங்களாக தடையில் இருந்த போதும் நெஸ்லே நிறுவனம் மும்பை நீதி மன்றத்தை அணுகி இருந்தது.

நீதி மன்றத்தின் வினாக்களுக்கு அரசு சார்பில் சரிவர பதில் அளிக்க முடியாததால் கோர்ட்டே சில ஆய்வகங்களை குறிப்பிட்டு அங்கு பரிசோதனை செய்ய உத்தரவிட்டு இருந்தது.

அங்கு அவர்கள் சொன்னது போல் காரியம் அளவு அதிகமாக இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தடை விலக்கப்பட்டது.


இங்கு தான் நமது அரசு துறைகளின் அவலம் தெரிகிறது.

மும்பை கோர்ட் சொன்ன ஆய்வகங்களில் 90 பாக்கெட்கள் சோதனை செய்துள்ள்ளார்கள். அதில் எல்லாவற்றிலும் சரியாக உள்ளது என்று சொல்கிறார்கள்..

அப்படி என்றால் முன்பு மற்ற ஆய்வகங்களிலும் எதை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்தார்கள் என்றே புரியவில்லை.

ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முடிவு வந்தால் சாப்பிடுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.

மீண்டும் மேகி கடைகளில் அலங்கரிக்கும் என்று தெரிகிறது. நெஸ்லே நிறுவனம் அதிக அளவில் விளம்பரத்திற்கு செலவு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.

குறுகிய காலத்திற்கு இந்த தடை, குழப்பம் என்று மக்கள் நியாபகத்தில் வைத்து இருப்பதால் வாங்க யோசிப்பார்கள். அதனால் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு இந்த நிறுவனம் பெரிதளவு லாபம் ஈட்ட முடியாது.

ஆனாலும் அதன் பிறகு மக்கள் மறதியும், மேகியின் சுவையும், நடிகர்களின் விளம்பரங்களும் மேகியை உச்சத்தில் கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.

குஜராத், கர்நாடக மாநில அரசுகள் ஏற்கனவே தடையை நீக்கி உள்ளன.

இதனால் நெஸ்லே பங்கு ஒரே நாளில் ஆறு சதவீதம் கூடியது. தற்போது மதிப்பீடலில் பங்கு மலிவாக இல்லை. இவ்வளவு குழப்பமான சூழ்நிலையில் நாம் சென்று மூக்கை நுழைக்க அவசியம் இல்லை. விலகியே நிற்போம்!

நண்பர்களுக்கு ஆயுத பூஜை தின வாழ்த்துக்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக