நேற்று வெளியாகிய இந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது. ஒரே துறையில் கடுமையான போட்டி கொடுத்து வந்த இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.
கணிப்பொறி நினைவகங்கள் துறையில் முன்னணி இடங்களில் இருப்பவை SanDisk மற்றும் Western Digital நிறுவனங்கள்.
இதில் Western Digital என்பது ஹார்ட் டிஸ்க் துறையில் அதிக அளவில் பிரபலமானது.
மெமரி கார்ட் மற்றும் USB மெமரி ஸ்டிக் போன்றவற்றில் முன்னணியில் இருப்பது SanDisk.
இந்த SanDisk நிறுவனத்தை Western Digital நிறுவனம் நேற்று வாங்கி கொண்டது. இந்த டீலின் மொத்த மதிப்பு 1.25 லட்சம் கோடி ரூபாய்.
பங்குச்சந்தையில் SanDisk மதிப்பில் இருந்து 23% அதிக ப்ரீமியம் கொடுத்து வாங்கப்பட்டது. இவ்வளவிற்கும் Western Digital நிறுவனம் கடன் வாங்கித் தான் SanDisk நிறுவனத்தை வாங்க உள்ளது.
அந்த அளவிற்கு இந்த டீல் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்த பிறகு வருடத்திற்கு மொத்தம் 43 லட்சம் கோடி ரூபாய்க்கு ஹார்ட் டிஸ்க் மற்றும் மெமரி கார்ட்களை விற்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதன் மூலம் Western Digital கணினி நினைவக துறையில் ஒரு மோனோபோலி நிறுவனமாக மாற உள்ளது.
ஏட்டிக்கு போட்டியாக ஹார்ட் டிஸ்க் விலைகள் இது வரை குறைந்து வந்தது. அந்த நிலையில் இனி மாற்றம் ஏற்படலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக