திங்கள், 19 அக்டோபர், 2015

ஏமாற்றம் கொடுத்தாலும் தடுமாறாத HCL பங்கு

கடந்த சில வாரங்கள் முன்பு HCL நிறுவனம் கிளின்ட் மற்றும் நாணய பிரச்சினைகளால் தங்கள் லாபம் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்து இருந்தது.


நமது தளத்திலும் இது தொடர்பாக விரிவான பதிவை எழுதி இருந்தோம்.

பார்க்க:  HCL நிறுவனத்தின் எச்சரிக்கையை எப்படி அணுகுவது?இன்று HCL நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிதி அறிக்கை வெளிவந்தது.

அதில் அவர்கள் சொன்னது போல் நிதி அறிக்கை நன்றாக இல்லை.

கடந்த காலாண்டை விட வருமானம் 0.5% கூடி இருந்தது. ஆனால் லாபம் 3% அளவு குறைந்து இருந்தது. கிளின்ட்டிற்கு கொடுத்த 18 மில்லியன் டாலர்களால் நிகர லாப விகிதம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அத்துடன் லாப விகிதம் 20%க்கு கீழே வந்து இருந்தது. இது இன்போசிஸ், TCS நிறுவனங்களை விட குறைவானது என்பது குறிப்பிட்டத்தக்கது.

ஆனாலும் இன்று HCL நிறுவன பங்கு எந்த எதிர்மறை விளைவையும் காட்டவில்லை, மாறாக கூடியே இருந்தது.

இதற்கு ஏற்கனவே பங்கு விலை கடந்த இரு வாரங்களாக நன்றாக துவைக்கப்பட்டு இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.

அதே வேளை நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட நேர்காணலில் அவர்கள் அடுத்த வரும் காலாண்டுகளில் ஒரு வித நல்ல நிதி அறிக்கையை கொடுப்போம் என்று நம்பிக்கை அளித்ததும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

இன்னும் HCL நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பது என்னவென்றால் இன்போசிஸ், TCS நிறுவனங்களை விட முன்னரே Cloud Computing, Big Data போன்ற டிமேண்டில் உள்ள தொழில் நுட்பங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அதன் விளைவு தற்போது தான் அதிக அளவில் ஆர்டர்களை கொடுத்து வருகிறது. அதனால் முதலீடு செய்த தொழில் நுட்பங்கள் இனி தான் அறுவடை கொடுக்க ஆரம்பிக்கும் என்று நம்பலாம்.

அதே போல் IoT போன்ற டிஜிட்டல் தொழில் நுட்பத்திலும் முதலீடு செய்ய ஆரம்பித்து உள்ளார்கள். இன்று பெங்களூரை சார்ந்த ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளார்கள். இவ்வாறு முதலீடுகளும் இன்னும் தொடரத் தான் செய்கின்றன.

முதலீடு செய்யும் காலக்கட்டத்தில் லாப விகிதம் குறைவாகவே இருக்கும். அது பலன் கொடுக்கும் சமயத்தில் திடீர் என்று கூட ஆரம்பிக்கும்.

இந்த மாதிரியான ஒரு நம்பிக்கை சந்தையில் உள்ளவர்களிடம் இன்னும் HCL நிறுவனத்தில் இருக்கிறது என்பது உண்மையான விடயம்.

அதனால் பங்கில் முதலீடு செய்தவர்கள் தொடரலாம் என்றே கருதுகிறோம். தற்போது பங்கு 850 ரூபாயில் இருக்கிறது. 830 ரூபாய்க்கு கீழே வரும் போது வாங்குவது நல்லது. கொஞ்சம் பொறுமை இந்த பங்கில் தேவைப்படுகிறது.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக