சில சமயங்களில் ஒருவரது பிரச்சினைகள் மற்றவர்களுக்கு சாதகமாக அமையும். அதிலும் வியாபாரத்தில் ஈடுபடும் நிறுவனங்களைப் பொறுத்தவரை இது சாலப் பொருந்தும்.
டாலர் மதிப்பு கூடினால் ஐடி நிறுவனங்களுக்கு கொண்டாட்டம். டாலர் மதிப்பு குறைந்தால் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு லாபம்.
ஆயில் விலை கூடினால் பெட்ரோல் விற்கும் நிற்கும் நிறுவனங்களுக்கு நஷ்டம்.
ஆயில் விலை குறைந்தால் உள்நாட்டில் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நஷ்டம். அதே சமயத்தில் டயர், உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபம்.
அதாவது ஒன்றின் நஷ்டம் மற்றொன்றில் ஆதாயமாக மாறி விடுகிறது.
பல சமயங்களில் சிறு முதலீட்டாளர்கள் தெரியாமல் செய்யும் தவறு இது தான்.
மழை பெய்யும் போது உப்பு விற்கும் நிறுவனங்கள், காற்று வீசும் போது உமி விற்கும் நிறுவனங்கள் என்று சூழ்நிலைக்கு எதிர்மாறாக முதலீடு செய்வோம். பெருத்த நஷ்டம் அடைவோம்.
இப்படித் தான் Call Drop பிரச்சினையும் அமைந்துள்ளது.
கடந்த வாரத்தில் தான் Call Drop பிரச்சினையை பற்றி எழுதி இருந்தோம். பேசிக் கொண்டிருக்கும் போது போன் கால் கட்டாவது தான் Call Drop.
பார்க்க: மொபைல் போன் கால் கட்டானால் ஒரு ரூபாய் கிடைக்குமா?
இதனால் ஒவ்வொரு கால் கட்டானாலும் ஒரு ரூபாய் அபராதம் என்று அரசு விதிக்க முற்பட டெலிகாம் நிறுவனங்கள் ஆடிப் போய் உள்ளன.
ஆனால் அதில் குளிர் காயப் போவது டெலிகாம் டவர்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் தான்.
ஏனென்றால் தேவையான அளவு டவர்கள் இல்லாததும் Call Drop பிரச்சனைக்கு ஒரு முக்கிய காரணம்.
அதனால் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க் கட்டமைப்பை மேம்படுத்த முனைந்துள்ளன. அபராதம் கட்டுவதற்கு நெட்வொர்க்கை மேம்படுத்துதல் எவ்வளவோ பரவாயில்லை என்ற நிலைக்கு வந்து விட்டன.
இது டவர்களை நிர்வகிக்கும் Bharti Infratel, Viom, Indus போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக அமைகிறது. அடுத்த, இரண்டு மூன்று வருடங்களுக்கு இந்த நிறுவனங்கள் வளர்ச்சி பெரிதளவில் இருக்க போகிறது.
இது போக, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் இன்டர்நெட் சேவை காரணமாகவும் அதிக அளவில் டவர்களை நிறுவ வேண்டி வரும்.
இப்படிப் பல முனைகளில் இந்த நிறுவனங்களின் வியாபாரம் நல்ல வளர்ச்சி கொடுக்கும் என்று நம்பலாம். இதில் கடன் பெரிதளவு இல்லாத நிறுவனங்களை உற்று நோக்குங்கள்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக