புதன், 7 அக்டோபர், 2015

பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி?

பொதுவாக நாம் பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரும் வட்டியை ஒழுங்காக கவனிப்பதில்லை.


ஆனால் உன்னித்து கணக்கிட்டு பார்த்தால் நமக்கு வரும் வட்டியில் 10% பிடிக்கப்பட்டதை கண்டுபிடிக்கலாம்.



ஆமாம். பிக்ஸ்ட் டெபாசிட்டில் வரும் வட்டிக்கு வருமான வரி மூலத்திலே வங்கிகளால் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது.

இதனை TDS என்று அழைப்பார்கள். அதாவது Tax Deducting At Source.

வரியைப் பிடிக்கும் அரசோ, வங்கிகளோ நம்மிடம் அது பற்றிய தெளிவான விளக்கங்களை கொடுக்காததால் நாமும் தெரியாமலே விட்டு விடுகிறோம்.


இதில் என்ன விந்தை என்றால் ஒருவர் வருமான வரி விளிம்பிற்குள்ளே வந்து இருக்க மாட்டார். அவருக்கும் சேர்த்து வங்கிகள் வரியை பிடித்து விடுகின்றன.

இதனைத் தவிர்ப்பதற்கும் ஒரு வழி  உள்ளது.

அவ்வாறு வருமான வரி வரம்பிற்குள் வராதவர்கள் முதலிலே வங்கியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதாவது நான் வருமான வரி எல்லைக்குள் இல்லை. எமக்கு வரும் வட்டியில் வரி எதுவும் பிடிக்காதீர்கள் என்று விண்ணப்பம் மூலம் சொல்ல வேண்டும்.

அதற்கு ஒவ்வொரு வங்கியிலும் 15G, 15H போன்ற படிவங்கள் இருக்கும்.

இதில் 15H என்பது மூத்த குடிமக்களுக்கானது. அவர்கள் தமக்கு வேறு வருமானம் எதுவும் இல்லை என்பதைக் குறிப்பிட இந்த படிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்த 15G என்பது மற்றவர்களுக்கானது. வருமான வரி வரம்பிற்குள் வராத எவரும் இந்த படிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த படிவத்தால் எப்படி பயன் கிடைக்கும் என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.

கணேசன் என்பவர் பத்து லட்ச ரூபாயை வங்கியில் போட்டு தனது ஓய்வூதியம் போன்று பயன்படுத்தி வருகிறார். அவருக்கு 8% வட்டி கிடைக்கும் என்று கருதினால் மாதம் 6666 ரூபாய் கிடைக்க வேண்டும்.

ஆனால் அவர் 15H படிவங்களை சமர்ப்பிக்காவிட்டால் வங்கி 666 ரூபாயை பிடித்தம் செய்து 6000 ரூபாயைத் தான் கொடுப்பார்கள்.

ஓய்வு காலத்தில் இந்த அறுநூறு ரூபாய் என்பது மதிப்பானதே. அதுவும் மாதந்தோறும் இழக்க வேண்டும் என்றால் சாதரான விடயமல்ல.

முன்னர் நாம் ஒரு வங்கியின் பல கிளைகளில் பணத்தை போட்டு வைத்து இருந்தால் ஒவ்வொரு கிளையிலும் இந்த படிவங்களை நிரப்ப வேண்டும்.

இந்த அக்டோபர் மாதம் முதல் எளிமைப்படுத்தி உள்ளார்கள்.

தற்போது ஆன்லைன் அல்லது வங்கியில் ஒரு முறை படிவத்தை நிரப்பி கொடுத்தால் அவர்கள் நமக்குரிய ஒரு எண்ணைக் கொடுப்பார்கள். அந்த எண்ணை எந்த வங்கியிலும் கொடுத்து வரி பிடித்தம் செய்வதை தவிர்க்கலாம்.

இந்த படிவங்களை கீழே உள்ள இணைப்பிலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தொடர்புடைய கட்டுரைகள்:
டெபாசிட்களுக்கு உண்மையான வட்டி என்பது என்ன?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக