இந்திய டெலிகாம் துறையில் முதல் இடத்தில இருக்கும் பாரதி ஏர்டெல் இன்று நிதி நிலை முடிவுகளை அறிவித்தது.
சந்தை எதிர்பார்ப்பின் படி வளர்ச்சி பெரிதளவு இருக்காது என்றே நம்பப்பட்டது. ஆனாலும் முடிவுகளில் எதிர்பார்ப்பு மிஞ்சப்பட்டது.
அவர்கள் நிதி முடிவுகளின் படி, மொபைல் இன்டர்நெட் டேட்டா வளர்ச்சி 50%க்கும் அதிகமாக உள்ளது குறிப்பிட்டத்தக்கது. இந்திய எ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமான டேட்டா வளர்ச்சி என்றும் சொல்லலாம்.
கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏர்டெல் இந்திய பிரிவு வளர்ச்சி 13% அளவு வளர்ந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாகும்.
ஏர்டெல் வெகு வேகமாக 334 நகரங்களில் 4G சேவையை விரிவாக்கி வருகிறது.
அதனால் இந்த முறை விரிவாக்க செலவு காரணமாக லாபம் பாதிக்கப்பட்டாலும் இது ஒரு அதி முக்கியமான துறை சார்ந்த முதலீடு என்றும் சொல்லலாம். அடுத்த சில ஆண்டுகளில் அதிக பலன்களைக் கொடுக்க ஆரம்பிக்கும்.
ஏர்டெல்லின் ஆப்ரிக்கா பிரிவு தான் 29% வருமானத்தைக் கொடுத்து வருகிறது. ஆனால் அங்கு நிலவிய தொய்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி காணவில்லை. அதுவும் இந்த காலாண்டில் 5% வளர்ச்சி அடைந்துள்ளது.
மொத்தத்தில் கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் 10% அதிக லாபம் இந்த காலாண்டில் கொடுத்துள்ளது. இது ஒரு நல்ல வளர்ச்சி என்றே கருதலாம்.
டெலிகாம் நிறுவனங்களைப் பொறுத்த வரை இந்த ஆண்டு தான் ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக பெரிதளவு செலவழித்து உள்ளார்கள்.
அதனால் ஏலத்தில் அதிக வட்டங்களை பெற்றுள்ள ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களில் அதிக அளவு கடனை வாங்கி உள்ளன.
இதன் காரணமாக பேலன்ஸ் சீட் கொஞ்சம் இறுக்கமாகவே உள்ளது. இது வட்டி செலவுகளையும் கூட்டுகிறது. குறுகிய கால அளவில் பெரிதளவு பங்கு விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் ஒரு முறை செலவான இந்தக் கடன் தான் அடுத்த பத்து, இருபது ஆண்டுகளுக்கு பெரிதளவு பலன்களை இந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப் போகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக