திங்கள், 12 அக்டோபர், 2015

நல்ல அறிக்கை கொடுத்தும் மந்தமாக இன்போசிஸ் பங்குகள்

இன்று இன்போசிஸ் நிறுவன நிதி அறிக்கை வெளியிடப்பட்டது.


சந்தை எதிர்பார்ப்பின் படி ஏழு சதவீத லாப வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. அதனையும் மீறி இன்போசிஸ் லாபம் கொடுத்துள்ளது.



ஆனால் இன்போசிஸ் பங்குகள் ஏற்றம் காணாமல் சரிவிலே இருந்தன.

இதற்கு நிதி அறிக்கையில் மறைந்து இருந்த சில விடயங்களும் காரணமாக இருந்தன.

மொத்த வருமானம் 17% வளர்ச்சி அடைந்து இருந்தது. அதே நேரத்தில் நிகர லாபம் 12% வளர்ச்சியும் கொடுத்து இருந்தது.

புதிதாக 75 மில்லியன் டாலர் மதிப்புடைய 10 கிளின்ட் ப்ரொஜெக்ட்களை பெற்றுள்ளது. இது இதுவரை காணாத டீல் வளர்ச்சியாகும்.

இது கடந்த சில காலாண்டுகளில் இன்போசிஸ் கொடுத்து வராத சிறப்பான நிதி அறிக்கை ஆகும்.

ஆனாலும் இன்போசிஸ் அடுத்த வருடத்தில் வருமான வளர்ச்சி 10~12% அளவே இருக்கும் என்று கூறி இருந்தது. இந்த வளர்ச்சி நாஸ்காம் கூறிய மென்பொருள் துறையில் இருக்கும் சராசரி வளர்ச்சியை விட குறைவாக இருந்தது. இது தான் இன்போசிஸ் பங்குகளின் மீது அதிக அழுத்தத்தை கொடுத்தது.

அடுத்த எதிர்மறை விடயமாக கடந்த காலாண்டில் கட்டுப்படுத்தப்பட்ட பணியாளர் விலகல் சதவீதம் இந்த காலாண்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 20%க்கு அருகில் வந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

HCLயைப் போல இன்போசிஸ் ஒரு 23 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒரு கிளின்ட் ப்ரொஜெக்டை இழந்துள்ளது.

பார்க்க: HCL நிறுவனத்தின் எச்சரிக்கையை எப்படி அணுகுவது?

இப்படி சில நுணுக்கமான எதிரமறை விடயங்கள் இன்போசிஸ் பங்கை எதிர்மறையில் எடுத்து சென்றுள்ளன.

ஆனாலும் தற்போதைய நிதி அறிக்கையால் பங்கு மலிவான விலையில் வந்துள்ளதும் குறிப்பிட்டத்தக்கது.

மொத்தத்தில், மென்பொருள் துறையில் வியாபர ரீதியாக அதிக அழுத்தங்கள் அதிகரித்து வருவது நன்கு தெரிகிறது. அதனால் எந்தவொரு மென்பொருள் நிறுவன பங்கையும் முழுமையாக நம்ப முடியவில்லை.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக