செவ்வாய், 13 அக்டோபர், 2015

சந்தையின் எதிர்பார்ப்பில் வந்த TCS நிதி முடிவுகள்

கடந்த ஒரு வருடமாக TCS பங்குகள் ஒன்றும் பெரிதளவு மாற்றம் காணவில்லை.


இதற்கு பணி நீக்கங்கள், குறைவான வளர்சி போன்றவை முக்கிய காரணமாக அமைந்தது.ஆனால் இந்த காலாண்டில் ஓரளவு நல்ல மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.

சந்தையின் எதிர்பார்ப்பை நிதி நிலை அறிக்கைகள் பூர்த்தி செய்துள்ளன.

கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருமானம் 6% அளவும், லாபம் 9% அளவும் வளர்ச்சி அடைந்துள்ளது. லாப விகிதம் 0.85% உயர்ந்துள்ளது.

பணியாளர் விலகல் சதவீதம் 16% அளவும், பணியாளர் பயன்படுத்தும் விகிதம் 86% என்றும் உள்ளது. இது இன்போசிஸ் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் நல்ல நிலையில் உள்ளது.

அடுத்த வருடம் 50,000 பணியாளர்களை புதிதாக எடுக்கும் திட்டத்துடன் TCS இருந்தது. தற்போது 75,000 பணியாளர்களை எடுப்பதாக சொல்லி உள்ளார்கள். அதனால் ஏதோ ஒரு வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக கருதிக் கொள்ளலாம்.

கடந்த ஒரு வருடமாக இந்த பங்கு உயரவே இல்லை. தற்போதைய நிதி அறிக்கையின் காரணமாக பங்கு மலிவு விலையில் வந்துள்ளது.

தொடர்பான பதிவுகள்:
நல்ல அறிக்கை கொடுத்தும் மந்தமாக இன்போசிஸ் பங்குகள்« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக