ஞாயிறு, 11 அக்டோபர், 2015

Coffee Day IPOவை வாங்கலாமா?

சிறிது நாட்கள் இடைவெளியின் பிறகு ஒரு IPOவை பற்றி பார்ப்போம்.

ஒரு மாதத்திற்கு முன்பு சந்தையில் பெரிய அளவில் சரிவு வந்த போது ஐபிஒக்களை தவிர்க்கலாம் என்று கூறி இருந்தோம்.

திறந்த சந்தையில் நல்ல மலிவான பங்குகள் கிடைக்கும் போது IPOவில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற பொருளில் ஒரு பதிவு எழுதி இருந்தோம்.
இன்னும் அந்த நிலையில் பெரிதளவு மாற்றம் இல்லை.

ஆனாலும் சந்தையில் செய்திகள் பரவலாக வரும் போது சந்தேகங்கள் வருவது இயற்கை. அந்த வகையில் எமக்கு சில மின் அஞ்சல்கள் Coffee Day IPO தொடர்பாக வருவதால் இந்த பதிவை தொடர்கிறோம்.

Coffee Day IPOவை பொறுத்த வரை ஒரு பரிட்சயமான நிறுவனம். இந்தியா முழுவதும் 1500 கபேக்களை வைத்துள்ளது. 209 நகரங்களில் விரிவாகியும் உள்ளது.

தற்போது 1150 கோடி நிதி திரட்டுவதற்கு சந்தையில் வந்துள்ளார்கள். அக்டோபர் 14ல் IPO வெளிவருகிறது. இந்த தொகை கடனை நிவர்த்தி செய்யவும், மேலும் சில விரிவாக்கங்களுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு பெரிய ஐபிஒ என்பதால் சந்தையில் அதிக அளவு உயர்த்தி பிடிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் நிதி அறிக்கையை பார்த்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வருமானம் கூடி இருந்தாலும் லாபம் எதுவும் இல்லை. அதனால் EPS எதிர்மறையில் செல்கிறது. இதன் காரணமாக P/E மதிப்பையும் கண்டுபிடிக்க முடியாது. சந்தையில் வேறு ஒரு பங்குடன் ஒப்பிடலாம் என்று பார்த்தால் இதே வியாபரத்துடன் ஒத்த வேறு போட்டியாளர்கள் பங்குச்சந்தையில் இல்லை.

Coffee Day இன்னும் இந்தியாவில் 46% சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. மேல் நாட்டின் Star Bucks நிறுவனம் தான் தற்போதைக்கு முக்கிய போட்டியாளர். ஆனாலும் Star Bucks நிறுவனத்தை ஒப்பிடுகையில் லாப விகிதம் குறைவாக உள்ளது.

Star Bucks ஒரு கபே ஸ்டார் மூலம் தினமும் 50,000 ரூபாய் சம்பாதிக்கிறது என்றால் Coffee Day 20,000 ரூபாய் வருமானத்தை ஈட்டுகிறது. இது தான் லாபத்தையும் பாதிக்கிறது. 1996ல் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்னும் லாபத்தில் செல்ல திணறுவது கடினமாக உள்ளது.

இப்படி ஒரு தெளிவில்லாத தகவல்கள் மற்றும் சில எதிர்மறை விடயங்களுடன் இருப்பதால் ஒரு பங்கு விலை 328 என்பது சரியான விலையாக இருக்கமா என்பதில் சந்தேகம் உள்ளது.

முழு திருப்தி இல்லாத நிலையில் இந்த IPOவை தவிர்க்கலாம் என்று நாம் கருதுகிறோம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக