ஞாயிறு, 4 அக்டோபர், 2015

டெபாசிட்களுக்கு உண்மையான வட்டி என்பது என்ன?

இரு வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் வங்கிகள் வைப்பு நிதிகளுக்கு பத்து சதவீத அளவு வட்டி தந்து கொண்டிருந்தன.

ஆனால் கடந்த ஓரிரு வருடத்தில் வட்டி குறைந்து ஏழரை சதவீதத்திற்கும் அருகில் வந்து விட்டது. தற்போது ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக வந்து விட்டது.



இதனால் ஒரு லட்ச ரூபாய் பிக்ஸ்ட் டெபாசிட்டில் போட்டு வைத்து இருப்பவர்களுக்கு முன்பு மாதம் 833 ரூபாய் கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது  400 ரூபாய் அளவு தான் கிடைக்கும்.


அதனால் சாமானிய மக்களாக நாம் பார்த்துக் கொண்டால் அய்யோ வட்டி குறைந்து விட்டது என்ற ஏக்கம் வரும்.

ஆனால் உண்மையான வட்டி என்பது அது அல்ல. ஆங்கிலத்தில் இதனை Real Interest Rate என்று குறிப்பிடுவார்கள்.

இதில் பணவீக்கம் என்பதும் முக்கிய காரணியாக அமைகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு சராசரி பணவீக்கம் 12 சதவீதமாக இருந்து வந்தது. அப்பொழுது வட்டி பத்து சதவீதம் தரப்பட்டது. அப்படி என்றால், நமக்கு இரண்டு சதவீத எதிர்மறை வட்டியே தரப்பட்டது.

ஒரு உதாரணத்துடன் எடுத்துக் கொள்வோம்.

இரண்டு வருடங்களுக்கு முன் நமது ஒரு லட்ச ரூபாய் பணத்திற்கு வருடத்திற்கு அதற்கு பத்து சதவீத வட்டி கிடைக்கிறது என்றால் 10,000 ரூபாய் கிடைத்து இருக்கும். ஒரு வருடம் கழித்து அந்த பணம் 1,10,000 என்று மாறி இருக்கும்.

அதே நேரத்தில் ஒரு லட்சம் ரூபாயின் உண்மையான மதிப்பு 12% பணவீக்கத்தில் ஒரு வருடம் கழித்து 88,000 ரூபாயாக மாறி இருக்கும். அதாவது 88,000 மதிப்புள்ள பொருட்களையே வாங்க முடியும்.

அப்படி என்றால், வங்கி 10,000 பணம் தந்து இருக்கிறது. ஆனால் உண்மையான மதிப்பு 12,000 குறைந்து இருக்கிறது. ஆக, நமக்கு நஷ்டம் இரண்டாயிரம் ரூபாய்

ஆனால் தற்போது 7.5% வட்டி தரப்படுகிறது. சராசரி பணவீக்கம் 4.5%க்குள் இருக்கிறது.

இந்த நிலையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7.500 ரூபாய் வட்டி கிடைத்து இருக்கும். ஆனால் பண மதிப்பு 4,500 ரூபாய் குறைந்து இருக்கும். ஆக லாபம் மூவாயிரம் ரூபாய்.

மறைமுகமாக பார்த்தால் தற்போதைய குறைந்த வட்டி தான் நமக்கு லாபம் கொடுக்கிறது. ஆனால் பொதுவாக இதை நாம் கண்டு கொள்வதில்லை.

தற்போதைய நிலையில் உலக அளவில் பார்த்தால் நமது நாட்டில் தான்  Real Interest Rate அதிகமாக இருக்கிறது.

வேறு எல்லா நாட்டிலும் Real Interest Rate என்பதை சராசரியாக 1.5% என்ற நிலையில் தான் வைத்து இருப்பார்கள். ஆனால் நமக்கு 3% என்று இருக்கிறது.

அதனால் இன்னும் ரிசர்வ் வங்கி இன்னும் வட்டியைக் குறைக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வருடத்திலும் வட்டிக் குறைப்பு தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:
CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக