சனி, 3 அக்டோபர், 2015

வரி விலக்கு தரும் PFC அரசு நிறுவன கடன் பத்திரம்

தற்போது சந்தையில் நிலவும் அதிரடி ஏற்ற, இறக்கங்கள் காரணமாகவும், வங்கி வைப்பு நிதிகளின் வட்டி குறைக்கப்பட்டதாலும் நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்கள் அதிக தேவையில் உள்ளன.


நிலையான வருமானம் தேவைப்படுபவர்கள் இந்த கடன் பத்திரங்களை நாடி செல்கின்றனர்.நாம் கடந்த வாரம் NTPC நிறுவனத்தின் கடன் பத்திரங்களை வாங்குமாறு கூறி இருந்தோம்.

பார்க்க: அதிக பாதுகாப்பு தரும் NTPC வரி விலக்கு முதலீடு பத்திரம்


ஆனால் NTPC பத்திரங்கள் மட்டும் ஆறு மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பிக்க பெற்றுள்ளன. இதனால் விதிப்படி முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த கடன் பத்திரங்கள் கிடைக்கும்.

அதனைத் தவற விட்டவர்களுக்கு அடுத்து ஒரு வாய்ப்பு.

அரசு நிறுவனமான Power Finance Corporation(PFC) கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.  தற்போது கடன் பத்திரங்கள் மூலம் 700 கோடி ரூபாய் நிதியை திரட்ட உள்ளது.

இது ஒரு நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனம். அதனால் AAA தர வரிசையும் பெற்றுள்ளது. நம்பிக்கையுடன் முதலீடு செய்ய இந்த தர வரிசை போதுமானது.

அக்டோபர் 5 முதல் 9 வரை இந்த கடன் பத்திரங்களை வாங்கலாம். NTPC போலவே 10, 15, 20 வருடங்களுக்கு வாங்கி கொள்ளலாம். அதற்கேற்ப வட்டி 7.36%, 7.52% , 7.60% என்று வழங்கப்படும்.

வருமான வரி விலக்கு சலுகையும் அளிப்பதால் 20%, 30% வரி கட்டுபவர்களுக்கு மொத்தமாக வருடத்திற்கு 10% வட்டி பலன் கிடைக்கும்.குறைந்த பட்சம் 5000 ரூபாய் முதல் 10 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

பங்குசந்தையை விட பாதுகாப்பான முதலீடு தேடுபவர்கள், அதிக வருமான வரி கட்டுபவர்கள் இந்த கடன் பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக