செவ்வாய், 27 அக்டோபர், 2015

இனி விளம்பரம் இல்லாமல் யுட்யூப் வீடியோ பார்க்கலாம்

இணைய உலகில் மட்டும் அல்லாமல் சமூக அளவிலும் யுட்யூப் ஏற்படுத்திய மாற்றம் மிகவும் அதிகம்.


தனுசுக்கு வாழ்வு கொடுத்தது முதல் நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது வரை யுட்யூப் வீடியோக்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தது.யாரும் எந்த வீடியோவையும் எளிதில் இன்டர்நெட்டில் பதிவு ஏற்றம் செய்து விடும். மிகவும் குறுகிய காலத்தில் வைரல் போன்று பலரையும் பார்க்க வைத்து விட முடியும்.

இவ்வாறு வீடியோக்களை பதிவு ஏற்றுபவர்களுக்கு விளம்பரம் மூலம் தான் வருமானம் கிடைத்து வந்தது.

யுட்யூப் வீடியோ பார்க்கும் முன் ஒரு விளம்பர வீடியோ வரும். அதனை ஸ்கிப் பண்ணி விட்டால் ஒரு சிறிய வருமானம். ஸ்கிப் பண்ணாமல் பாதி பார்த்தால் கொஞ்சம் அதிக வருமானம், முழுவதுமாக பார்த்தால் இன்னும் அதிக வருமானம் என்று கொடுத்து வந்தார்கள்.

ஆனாலும் குறும்படம், திரைத்துறை போன்ற வணிக நோக்கில் வீடியோ தயாரிப்பவர்களுக்கு இந்த வருமானம் போதுமானதாக இல்லை.

அதனால் கூகிள் நிறுவனம் யுட்யூப் ரெட் என்ற பெயரில் ஒரு கட்டண சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, மாதத்திற்கு 13$ கட்டணம் செலுத்தி நாம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்த்துக் கொள்ளலாம்.

எந்தெந்த வீடியோக்களை பார்க்கிறோமோ அதனை உருவாக்குபவர்களுக்கு 55% வருமானத்தை விகிதங்களில் கொடுத்து விடுவார்கள். மீதி 45%த்தை யுட்யூப் நிறுவனம் வைத்துக் கொள்ளும்.

முதல் கட்டமாக சோதனை முறையில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. படிப்படியாக மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்த முயற்சி வெற்றி அடைய அதிக வாய்ப்பு இருப்பதால் இந்தியாவிலும் Video-On-Demand முறையில் இணைய தளங்கள் தொடங்கியவர்களுக்கு அதிக பாதிப்பு வரலாம்.

தியேட்டர் கிடைக்காத நல்ல தமிழ் திரைப்படங்கள் யுட்யூப் மூலம் பிரபலமாகவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே வேளையில் வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

எமக்கு இன்டர்நெட்டில் பகுதி வேலை தொடர்பாக அதிக மின் அஞ்சல்கள் வருகின்றன. அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

நம்மிடம் இருக்கும் கேமராவை வைத்தே நல்ல வீடியோக்கள் எடுத்து அதனை கொஞ்சம் எடிட்டிங் போன்ற வேலைகள் செய்து வித்தியாசமாக பார்க்கும் படி வெளியிட்டால் வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக