திங்கள், 5 அக்டோபர், 2015

இன்ஜினியரிங் படிக்காதவர்களை தேடும் விப்ரோ

இதனை ஐடி துறையில் வந்த புது மாற்றம் என்று தான் சொல்ல முடியும்.


இது வரை ஐடி துறையில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் தான் மிக அதிக அளவில் எடுக்கப்பட்டு வந்தனர்.



ஆனால் தற்போது விப்ரோ நிறுவனம் இன்ஜினியரிங் படிக்காத அறிவியல் துறை சார்ந்த B.Sc மாணவர்களையும் எடுக்க துவங்கி உள்ளனர்.

ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்பே விப்ரோ நிறுவனம் இந்த முறையை துவங்கி விட்டாலும் மிக குறைவாகவே எடுக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் தற்போது வருடத்திற்கு 500 முதல் ஆயிரம் வரை எடுக்க தீர்மானித்து உள்ளனர்.

ராஜஸ்தானை சார்ந்த BITS Pilani பல்கலைக்கழகம் மூலம் அவர்களுக்கு Work Integrated Learning Programme என்ற முறையின் மூலம் தேவையான பயிற்சி வழங்கப்படும்.

அவர்களுக்கு வருடத்திற்கு மூன்று லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. பல சாதகமான விடயங்கள் உள்ளன.

சில நேரத்தில் ஐடி துறையில் உள்ள ஆடோமேசன், டெஸ்டிங் போன்ற பணிகளுக்கு நுட்பமான கணினி அறிவு தேவையில்லை. அதனால் இன்ஜினியரிங் பட்டதாரிகளைத் தான் போட வேண்டிய அவசியமில்லை.

அந்த இடத்தை அறிவியல் மாணவர்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம். அவர்களுக்கு கொஞ்சம் குறைவாக ஊதியம் வழங்கினால் போதுமானது.

இன்ஜினியரிங் பட்டதாரிகளை ஒரு நிறுவனத்தில் தக்க வைப்பது என்பது சிரமமானது. ஆனால் B.Sc பட்டதாரிகள் வெளியே செல்ல வாய்ப்பு குறைவு. அதனால் விலகல் சதவீதத்தை கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

ஐடி நிறுவனங்களில் 70% செலவு பணியாளர்கள் ஊதியத்திற்கு தான் செல்கிறது. இப்படி செலவை கட்டுப்படுத்துவதன் மூலம் லாப மார்ஜினைக் கூட்டிக் கொள்ளலாம்.

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கி வந்த ஒரு துறை ஐடி. அதில் ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் இன்ஜினியரிங் என்றால் ஓடி சென்று படிக்கும் நிலையில் அதிக மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:
25,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் புதிய வங்கிகள்

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக