வியாழன், 22 அக்டோபர், 2015

சாதகமான காரணிகளால் தொடர் உயர்வில் இந்திய சந்தை

இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த ஒரு தொய்வு நிலை தற்போது சந்தையில் இல்லை என்றே சொல்லலாம்.


ரிசர்வ் வங்கி வட்டியை கணிசமாக குறைத்ததில் இருந்து இந்த உயர்வு ஆரம்பித்தது.அதன் பிறகு செப்டம்பர் காலாண்டில் நிறுவனங்கள் வெளியிட்ட நிதி முடிவுகள் மோசமில்லாத நிலையிலே இருந்தன.

சென்செக்ஸ் நிறுவனங்களிலே ரிலையன்ஸ், TCS, HDFC, இன்போசிஸ், விப்ரோ போன்றவை நல்ல நிதி முடிவுகளைக் கொடுத்து இருந்தன.

இதைப் போல் மிட் கேப் நிறுவனங்களிலும் உள்ள நிதி நிறுவனங்கள், Mindtree, KPIT போன்ற நிறுவனங்களும் நல்ல நிதி அறிக்கைகளைக் கொடுத்து இருந்தன.

அதனால் வளர்ச்சி என்பது ஆரம்ப நிலையில் வந்துள்ளது என்று கருதுவதால் சந்தையில் ஒரு வித நம்பிக்கை காணப்படுகிறது. இன்னும் வளர்ச்சி வேகங்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அதே நேரத்தில் வேறு பாதகமான உள்நாட்டுக் காரணிகள் ஒன்றும் இது வரை தென்படவில்லை.

அப்படியே அடுத்து பார்த்தாலும், பிஜேபி பீகார் தேர்தலில் தோற்கும் வாய்ப்பு மட்டுமே ஒரு எதிர்மறை காரணியாக தெரிகிறது.

அதே போல் உலக அளவிலும் எதிர்மறை காரணிகள் தெரியவில்லை.

நேற்று ஐரோப்பியன் வங்கி கூட ஐரோப்பிய பொருளாதரத்தை உயர்த்துவதற்காக அதிக அளவில் பணப்புழக்கத்தை கொண்டு வர முயலுவதாக தெரிவித்து உள்ளது.

அதனால் ஆசியா சந்தைகள் அனைத்துமே உயர்வைக் கண்டன. அதில் இந்திய சந்தையும் விதி விலக்காக இல்லாமல் இன்று மட்டும் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வைக் கண்டது.

அடுத்து, லாப உறுதிபடுத்துதலுக்காக சிறிய குறுகிய கால கரெக்சன்  இருக்கலாம் என்பது போல் தெரிகிறது. அதனால் கொஞ்சம் பொறுமை காத்து முதலீடுகளை தொடரலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக