வியாழன், 15 அக்டோபர், 2015

எரிபொருள் விலை குறைவால் உச்சத்தில் விமான பங்குகள்

இந்திய விமான நிறுவனங்களை நடத்துவது என்பது மிகவும் சிரமம்.


அவர்களின் 35% செலவு எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது. அதனால் எரிபொருள் விலை உச்சத்தில் இருக்கும் போது அதிக விலைக்கு வாங்க வேண்டும்.



ஆனால் இந்திய சூழ்நிலைகளுக்கு டிக்கெட் விலை அதிகமாக இருந்தால் விமானம் காலியாகத் தான் செல்ல வேண்டி இருக்கும்.

அதிலும் இந்திய விமான நிலையங்களில் பார்கிங் கட்டணம் மற்ற எல்லா நாடுகளை விட அதிகம்.

இதனால் கடந்த காலங்களில் ஒரு விமான நிறுவனம் லாபத்தில் செல்வதே அரிதான ஒன்றாக தான் இருந்து வந்தது.

கிங் பிஷர் நிறுவனத்தை இழுத்து மூடிய பிறகு Jet Airways, SpiceJet என்ற இரண்டு நிறுவனங்களுமே பங்குச்சந்தையில் இருந்து வந்தன.

Jet Airways நிறுவனம் கொஞ்ச காலமாகவே ;நஷ்டத்தில் தான் சென்று வருகிறது.

SpiceJet நிறுவனத்தை கலாநிதி மாறன் கை கழுவிய பிறகு அஜித் சிங் அழகாக மீட்டு வந்தார். அவருக்கு சூழ்நிலைகளும் சாதகமாக அமைந்தன.

100 டாலரில் வர்த்தகமாகி கொண்டிருந்த கச்சா எண்ணெய் 40 டாலருக்கு குறைந்தது. அதனை அருமையாக பயன்படுத்திக் கொண்டார்.

அதனால் தான் கடந்த வருடத்தில் SpiceJet பங்கை 15 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: Spice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா?

கடந்த இரண்டு காலாண்டுகளில் லாபம் கொடுத்ததன் விளைவாக தற்போது 41 ரூபாயில் வர்த்தகமாகி கொண்டு வருகிறது.

ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 150% லாபம். பலன் அடைந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!

இன்னும் விமான நிறுவனங்களின் லாபம் அடுத்த காலாண்டுகளிலும் தொடரும் போல் தான் தெரிகிறது.

குறைவான எண்ணெய் விலையால் லாபம் அதிகமாக கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில்  பண்டிகை காலங்கள் என்பதால் விமானங்களில் காலி இருக்கைகள் குறைந்து கொண்டே செல்கிறது. சராசரியாக 80%க்கும் மேல் Occupancy Ratio இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதனால் இந்த பங்குகளில் வைத்து இருப்பவர்கள் வரும் காலாண்டுகளிலும் தொடரலாம்.

ஆனால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்பவர்கள் எண்ணெய் விலை உயர்வுகளையும் கண்காணித்து முதலீடுகளை தொடருவது நல்லது!

அடுத்து ஒரு பதிவில் இண்டிகோ IPO பற்றியும் எழுதுகிறோம். பங்கு பரிந்துரைகள் வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையிலும் muthaleedu@gmail.com என்ற முகவரியில் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். முன்பு போல் சேவை வழங்கப்படும்.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக