புதன், 14 அக்டோபர், 2015

SIP முறையில் ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்ய எளிய வழி

இதற்கு முன்னர் SIP முறையில் முதலீடு செய்வதால் ஏற்படும் பலன்களை பற்றி கூறி இருந்தோம்.

பார்க்க: SIP முறையில் முதலீடு செய்வது எப்படி பயனாகிறது?


இந்த SIP முறை வைப்பு நிதிகளுக்கு பொருந்துவதை விட, ரிஸ்க் அதிகமுள்ள பங்குச்சந்தை முதலீடுகளுக்கும், ம்யூச்சல் பண்ட்களுக்கும் தான் அதிகம் பொருந்துகிறது.



ஏனென்றால், இவற்றில் பங்கு விலைகளோ அல்லது ம்யூச்சல் பண்டில் NAV விலையோ தொடர்ந்த மாற்றத்திற்கு உட்பட்டவை.

ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும் இந்த விலைகளை உற்றுப் பார்த்து முதலீடு செய்வது என்பது எளிதான காரியமல்ல.

இந்த சமயத்தில் தான் Systematic Investment Plan(SIP) என்ற முறை முக்கியத்துவம் பெறுகிறது.


ஒரே சமயத்தில் அதிக விலைக்கு பண்ட்களை வாங்குவதை விட ஒவ்வொரு மாதமும் ஒரு சீரான அளவில் வாங்கி வந்தால் லாபமும், நஷ்டமும் ஓரளவு சராசரி செய்யப்பட்டு விடும்.

இங்கு ரிஸ்க் சராசரி செய்யப்பட்டு விடுவதால் புதியவர்கள் கூட SIP முறையில் அதிக பயமின்றி முதலீடு செய்யலாம்.

ஆனாலும் எமக்கு வரும் மின் அஞ்சல்களில் இருந்து சில நடைமுறை பிரச்சினைகளை அறிய முடிகிறது.

ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அந்த பண்டினை தரும் நிறுவனங்களை நாட வேண்டி உள்ளது. ஒவ்வொரு மாதமும் அவர்களை சென்று பார்த்து SIP முறையில் முதலீடு செய்வது என்பது கடினமான காரியம்.

அதே நேரத்தில் டிமேட் வைத்தும் வாங்கி கொள்ளலாம். ஆனால் புதிதாக வருபவர்களிடம் டிமேட் கணக்குகள் இருப்பதில்லை.

அப்படியே டிமேட் வைத்து இருந்தாலும் SIP முறையில் ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்வதற்கு ஒரு தெளிவான வழி இருப்பதில்லை. ஒவ்வொரு மாதமும் நாம் தான் தேடித் பிடித்து முதலீடு செய்ய வேண்டி உள்ளது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில்  தான் FundsIndia போன்ற இணையதளங்கள் மூலம் வாங்குவது முக்கியத்துவம் பெறுகிறது. இவர்களிடம் டிமேட் கணக்கு இல்லாமலே ம்யூச்சல் பண்ட்கள் வாங்கலாம். 



FundsIndia கணக்குகளை திறப்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் தானாகவே நமது முதலீடு பணம் ECS முறையில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

FundsIndia போன்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட எட்டு வருட அனுபவம் இந்த துறையில் பெற்றுள்ளன. செபியின் அனுமதி பெற்று இயங்குவதால் பாதுகாப்பிலும் பிரச்சினையில்லை.

புதிதாக ம்யூச்சல் பண்ட் வாங்குபவர்கள் இந்த முறையை பரிசீலிக்கலாம்.

சில சமயங்களில் சிறிய தொகை தான் மிக பெரிதாக மாறும்.

ம்யூச்சல் பண்ட் என்பது நமது சார்பாக பண்ட் மேலாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வார்கள். பல தொழில்களில் உள்ள பல நிறுவனங்களில் முதலீடு செய்வதால் ஒரு நிறுவனம் துவண்டாலும் மற்ற நிறுவனங்கள் தாங்கி பிடித்து விடும்.

அதனால் வருடத்திற்கு சராசரியாக 14~15% லாபம் பெறுவது என்பது இங்கு சாத்தியமான ஒன்று.

இந்த கணக்கில் பார்த்தால், மாதம் 5000 ரூபாயை முதலீடு ம்யூச்சல் பண்ட்களில் முதலீடு செய்து வந்தால் ஏழு வருடங்களில் 4,20,000 ரூபாய் முதலீடு செய்து இருப்போம்.

அந்த பண்ட் சராசரியாக 14% லாபம் கொடுத்து இருந்தால் ஏழு வருடங்களில் 7.15,000 ரூபாயாக முதலீடு உயர்ந்து இருக்கும்.



நாற்பத்து ஐந்து வயதுக்குள்ளவர்கள் வைப்பு நிதிகளோடு இந்த மாதிரியான குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகளையும் கவனித்துக் கொள்ளலாம்.

நாம் சம்பாதித்த பணமும் நம்முடன் சேர்ந்து உழைக்க SIP போன்றவை சந்தையில் உள்ள நல்ல எளிய வழிமுறைகளாகும்.

கீழே உள்ள FundsIndia இணைப்பில் எந்த ம்யூச்சல் பண்ட் எவ்வளவு ரிடர்னை வருடத்திற்கு கொடுத்துள்ளது என்பதை அறியலாம். அவர்களை தொடர்பு கொள்ளும் படிவமும் அதே பக்கத்தில் உள்ளது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக