வியாழன், 8 அக்டோபர், 2015

கச்சா எண்ணெய் விலை உயர்வால் மாற்றம் காணும் ஆயில் பங்குகள்

நேற்று ONGC, Cairn போன்ற நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வை சந்தித்தன.


இதற்கு உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் ஐந்து சதவீத அளவு உயர்ந்தது காரணமாக அமைந்தது.



வெளியே கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்படும் போது உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக தேவை ஏற்படும்.

அதனால் உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் மேலே சென்றன.

அதே நேரத்தில் OMC என்று சொல்லப்படும் ஆயில் மார்கெட்டிங் நிறுவனங்களுக்கு எதிர்மறை விளைவை கொடுத்தது. இந்த நிறுவனங்கள் அதிக விலையில் எண்ணையை வாங்கி விற்க வேண்டிய நிலை வருவது பாதகமாக அமையும்.

ஆனாலும் இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடருமா என்பதில் சில சந்தேகங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

முன்பு சொன்னது போல் அமெரிக்க பாறை இடுக்குகளில் எடுக்கப்படும் ஷெல் எண்ணெய் சந்தைக்கு அதிக அளவில் வந்ததும் இது வரை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது.

பார்க்க: கச்சா எண்ணெய் விலை சரிவிற்கு காரணம் என்ன?

தற்போது ஒரு கட்டத்திற்கு கீழ் விலை குறைந்ததால் எண்ணெய் எடுப்பதற்கு ஆகும் செலவை கூட பெற முடியாது. அதனால் தங்கள் உற்பத்தியைக் குறைக்க ஷெல் வழியில் எண்ணெய் எடுப்பவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நேற்றில் இருந்து கிட்டத்தட்ட ஆறு சதவீதம் அளவு குறைவாக எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. அது தான் நேற்றைய விலை குறைவுக்கு காரணமாக அமைந்தது.

ஆனால் மேலும் எண்ணெய் உற்பத்தியை பெருமளவில் குறைப்பார்கள் என்பது சந்தேகமே.அதிக பட்சமாக இரண்டு சதவீதம் வரை வேண்டுமானால் குறையலாம் என்பதே எதிர்பார்ப்பு.

அதனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் மற்ற OPEC நாடுகள் உற்பத்தியைக் குறைப்பதற்கு  தேவையான நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் எண்ணெய் விலை மேலும் கூடுவது கடினமே.

இது போக, ஐரோப்பா, சீனா, போன்ற நாடுகளில் எண்ணெய் தேவை சிறிது அதிகரித்து உள்ளதும் தேவையைக் கூட்டி இருந்தது.

ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே இன்னும் பொருளாதார தேக்கத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை.

அந்த சூழ்நிலையில் மிக வேகமாக எண்ணெய் விலை கூட வாய்ப்பில்லை என்றே கருதலாம்.

இந்த வருடம் வரை கச்சா எண்ணெய் விலை 45 டாலருக்கு அருகில் வர்த்தமாகும் என்பது தான் பலரது கணிப்பாக உள்ளது.

ஆயில் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் இந்த குறிப்புகளை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!

தொடர்பான கட்டுரைகள்:
எண்ணெய் விலை குறைவு ஆயில் நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கும்?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக