வியாழன், 19 மார்ச், 2015

ஒரு வார்த்தையில் சந்தையை மாற்றிய அமெரிக்க மத்திய வங்கி

கடந்த ஒரு வாரமாக உலக சந்தைகள் அனைத்தும் சுனக்கதிலே இருந்தன. சந்தை மட்டுமல்லாமல் தங்கம், கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலைகளில் தொய்வு இருந்தது.





அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை நீண்ட காலத்திற்கு பிறகு கூட்டலாம் என்ற எதிர்பார்ப்பு உறுதியாக இருந்தது. ஆனால் என்ன நினைத்தார்களோ இன்று எந்த வித மாற்றமும் இல்லை என்று அறிவித்து விட்டார்கள்.

அதே நேரத்தில் கடந்த அறிக்கையில் இருந்த Patient என்ற வார்த்தையை மட்டும் நீக்கி விட்டார்கள். இந்த ஒரு வார்த்தை நீக்கத்தில் பல அர்த்தங்களையும் சொல்லி இருந்தார்கள்.

அதாவது, கடந்த அறிக்கையில் பொறுமையாக வட்டியைக் கூட்டலாம் என்று இருந்ததை நீக்கி விட்டார்கள்.

இதனால் அடுத்த முறை வட்டி கூடுவதற்கான சிக்னல்களை கொடுத்துள்ளார்கள் என்று சந்தை கருதுகிறது.

இதனால் மீண்டும் சந்தை இன்று காலையில் பச்சை நிறத்தில் சென்றது. அதன் பிறகு தின வர்த்தகர்களின் புண்ணியத்தால் ஏற்ற, இறக்கங்களுடன் முடிந்தது.

அடுத்த முறை நாங்கள் கூடுவதற்கான தேதி வரை காத்திருக்க மாட்டோம். தரவுகள் அடிப்படையிலே வட்டி மாற்றங்களை செய்வோம் என்றும் சொல்லி உள்ளார்கள்.

அதனால் இந்திய ரிசர்வ் வங்கி செய்வது போல் திடீரென்று வட்டியை கூட்டவும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்து..

இன்று காலை Moneycontrol தளத்தில் எமது போர்ட்போலியோவை பார்த்ததும் ஒரு அதிர்ச்சி. ஒரு மூன்று லட்ச ரூபாய் முதலீடு அப்படியே குறைந்து இருந்தது. மேலோட்டமாக பார்க்கையில் ஒன்றுமே புரியவில்லை.

அதன் பிறகு ஒவ்வொரு பங்காக ஆய்வு செய்த போது தான் HCL பங்கின் விலை பாதியாக குறைந்து இருந்தது தெரிய வந்தது. அப்புறம் விசாரித்தால் ஒன்றிற்கு ஒன்று போனஸ் பங்கு கொடுதுள்ளார்களாம்.

இதே போல் Tech Mahindra பங்கிலும் போனஸ் கொடுத்துள்ளார்கள். உங்களது போர்ட்போலியோவையும் கவனித்துக் கொள்ளவும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. ஆமாம் சார். நானும் அதிர்ந்து போனேன். (hcl, tech mahindra). ஆனால் அந்த போனஸ் பங்குகள் இன்னும் demat account க்கு வரவில்லை!!!!!

    பதிலளிநீக்கு