திங்கள், 10 ஆகஸ்ட், 2015

ஜூஸ் தயாரிக்க போகும் கோகோ கோலா

மக்கள் உடல் நலத்தின் மீது அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு இந்த டீல் சாட்சியாக இருக்கும்.


எதற்கும் பயன்படாத ஒரு பானம் என்றால் கார்போனைட் கலந்த கோலா, பெப்சியை சொல்லலாம்.



பூச்சிகொல்லி மருந்து, பெனாயில் போன்றவற்றிற்கு ஒப்பானது என்று பல வழிகளில் எதிர்ப்புகள், பிரச்சாரங்கள்  வந்தாலும் கூட அரசினால் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது.

கோலாவை தடை பண்ணினால் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் அளவிற்கு அதிகாரம் மிக்க ஒரு நிறுவனமாக இருந்து வந்தது.

ஒரு பக்கம் கேடு என்று தெரிந்து கொண்டாலும் பிட்சா, பர்கர், பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து கார்போனைட் பானம் கட்டாயமாக புகுத்தப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோலா நிறுவனத்தின் வியாபாரமும், லாபமும் எதிர்பார்த்த அளவு இல்லை.

அதற்கு மக்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கறை காட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

இனியும் கார்போனைட் சேர்க்கப்பட்ட பானங்கள் மட்டும் விற்று பயனில்லை என்ற முடிவிற்கு கோலா நிறுவனம் வந்த விட்டது போல.

அதனால் பழ ஜூஸ் தயாரித்து விற்கும் சுஜா என்ற அமெரிக்க நிறுவனத்தை வாங்கியுள்ளார்கள்.

இந்த டீல் பொதுவில் வைக்கப்படாததால் எவ்வளவு தொகைக்கு பரிமாறப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. இதனால் கோலாவின் வியாபர உத்தி மாறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆக, மக்கள் மனம் மாறி விட்டால் அரசுகளால் ஒன்றும் செய்ய முடியாததை இந்த டீல் உணர்த்துகிறது.

பங்குச்சந்தையில் Jubilant Foodworks என்ற நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தான் வெளிநாட்டு பிட்சா, பர்கர் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக இருக்கிறது.

அவர்களது கடந்த ஒரு வருட நிதி அறிக்கையை பார்த்தால் இந்திய மக்கள் பிட்சா, பர்கர் சாப்பிடுவதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. அதனால் லாபம் கூடவில்லை என்று சொல்லி உள்ளார்கள்.

இந்த நிகழ்வுகள், தரவுகள் எல்லாம் கீழ் உள்ள கருத்தை தருவதாக எடுத்துக் கொள்ளலாம்.

இனி வரும் காலத்தில் இயற்கை விவசாயம் செய்பவர்கள், பூச்சிக்கொல்லி மருந்து கலக்காத காய்கறிகள் விற்பவர்கள் போன்றவர்களுக்கு அதிக தேவை ஏற்படுத்தலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக