இந்தியாவில் ஆட்டோ துறையில் உதிரி பாகங்கள் தயாரிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
JK Tyre, MRF, Apollo, Balkrishna என்று இந்திய டயர் நிறுவனங்களின் பட்டியல் கொஞ்சம் அதிகம்.
அதற்கு நமது நாட்டில் ரப்பர் மலிவாக இருப்பதால் ஏற்றுமதி சந்தையில் அதிகமாக விற்று லாபம் அதிகமாக சம்பாதிக்க முடிந்தது.
கடந்த ஒரு வருடமாக ரப்பர் விலை குறைவாகவே இருந்ததால் இந்த டயர் நிறுவனங்கள் எழுச்சியிலே இருந்தன.
ஆனால் தற்போது சீனா நிறுவனங்கள் நமக்கு போட்டியாக மலிவு விலையில் டயர்களை குவிக்க ஆரம்பித்து விட்டன.
இதற்கு அங்கு நிலவும் பொருளாதார நிலையம், நாணய மதிப்பு வீழ்ச்சியும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சீன நிறுவனங்கள் ஏற்றுமதி சந்தையில் போட்டியைக் கொடுப்பதோடு அல்லாமல் இந்திய உள்நாட்டு சந்தையிலும் கடுமையான போட்டியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
ஆனாலும் மக்கள் காரின் முக்கிய பாகமான டயர் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் தரம் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் MRF போன்ற பிராண்ட் நிறுவனங்கள் ஓரளவு தப்பித்து விடும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் மலிவு விலையில் விற்று சந்தையை பிடிக்கும் மற்ற இந்திய நிறுவனங்களுக்கு இது ஒரு கடினமான காலக்கட்டம்.
பல நிறுவனங்கள் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டயர்களுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும் கோரிக்கை கூட வைத்துள்ளன.
இதனால் டயர் நிறுவன பங்குகளை தற்போது தவிர்க்கலாம்.
நீண்ட கால நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் இந்த பங்குகளில் இருந்து வெளியே வரவும் முயற்சிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக