திங்கள், 3 ஆகஸ்ட், 2015

POWER MECH IPOவை வாங்கலாமா?

இந்த வாரம் Power Mech Projects என்ற நிறுவனம் ஐபிஒவாக வரவிருக்கிறது. அதனை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.


2007ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் மின்சார உற்பத்திக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இவர்கள் NTPC, BHEL, Adani, L&T, Reliance போன்ற பெரிய நிறுவனங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தற்போது 270 கோடி ரூபாயை திரட்டுவதற்காக பங்குச்சந்தைக்கு வருகிறார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் 20% அளவு லாப CAGR வளர்சியைக் கொடுத்துள்ளது. ஒரு பங்கின் மூலம் கிடைத்த வருமானம் 57 ரூபாயாக உள்ளது.

ஒரு பங்கின் விலை 615 முதல் 640 ரூபாயாக நிர்ணயிக்கபப்ட்டு உள்ளது.

இதனால் P/E மதிப்பு 13க்கு அருகில் வருகிறது. இது துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது 50% அளவு குறைந்தே வருகிறது.

பங்கின் உச்ச மதிப்பான 640 ரூபாயில் முதலீடு செய்தால் 820 ரூபாய் வரை பங்குச்சந்தை பட்டியலில் கூட வாய்ப்பு உள்ளது.

தற்போதைய மத்திய அரசு மின் தேவையைக் கருத்தில் கொண்டு அதிக அளவிலான மின் திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது.

இதனால் மின் உற்பத்தி துறைக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்பு அடுத்த சில ஆண்டுகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

இந்த நிறுவனமும் அதிக அளவு ஆர்டர்கள் பெறும் வாய்ப்பு இருப்பதால் நீண்ட கால நோக்கில் கூட இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.



அதே வேளையில் இந்த நிறுவனத்தின் பல ப்ராஜெக்ட்கள் மத்திய அரசு நிறுவனங்களை சார்ந்து இருப்பதால் அரசின் கொள்கை முடிவுகள் சில சமயங்களில் எதிர்மறையாக மாறலாம். ஆனாலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு வாய்ப்புகள் குறைவே.

ஐபிஒ வெளியீடு ஆகஸ்ட் ஏழாம் தேதி வருகிறது. ஆகஸ்ட் 11 வரை விண்ணப்பிக்கலாம்.

பின் இணைப்பு:
இதனைத் தொடர்ந்து இன்னும் பல ஐபிஒக்கள் வர உள்ளன. அவற்றை Power Mach உடன் ஒப்பிடுகையில் இதனை விட நன்றாக உள்ளது போல் தெரிகிறது. அதனால் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் Power Mach IPOவிற்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:
SYNGENE IPOவை வாங்கலாமா?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக