சில சமயங்களில் இந்தியாவில் என்ன நடக்குகிறது என்றே தெரியவில்லை. தானும் குழம்பி மக்களையும் குழப்பும் அரசைத் தான் நாம் பெற்றுள்ளோம்.
ஒரு சமயம் மேகியில் உப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
தற்போது இல்லை, எல்லாம் சரியாக இருக்கிறது என்று அறிக்கை வந்துள்ளது.
கோவாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேகி பாக்கெட்கள் மைசூர் உணவு ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டன. அங்கு எல்லாம் சரியாக இருப்பதாக அறிக்கை வந்துள்ளது.
இந்த ஆய்வு நடப்பதற்கு இவ்வளவு நாள் தாமதம் ஏன்? இதற்கு முன் செய்த ஆய்வில் என்ன குளறுபடி? இடையில் என்ன தான் நடந்தது? என்பதெல்லாம் வெளிப்படையாக இல்லாத அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது.
அப்படி என்றால் எல்லா மேகி பாக்கெட்களையும் எரித்து சாம்பாலாக்கிய நெஸ்லே நிறுவனத்திற்கு யார் நஷ்ட ஈடு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.
அவர்களும் கேட்க வாய்ப்பில்லை. அரசுடன் மல்லுக் கட்டாமல் மீண்டும் மேகியைக் கொண்டு வந்தால் மட்டும் போதும் என்று இருக்கிறார்கள்.
இதனால் இன்று சந்தையில் நெஸ்லே நிறுவனத்தின் பங்குகள் பத்து சதவீத உயர்வு அடைந்துள்ளன.
மக்களை இரண்டு மாதமாக முடிந்த அளவு குழப்பி உள்ளதால் எவ்வளவு விரைவில் அவர்கள் மேகியை ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒரு கேள்வி தான்.
ஆனாலும் காலப்போக்கில் விளம்பரங்கள் எல்லாவற்றையும் மறக்க வைத்து விடும்.
அதனால் இனி வரும் காலங்களில் நெஸ்லே நிறுவனம் விளம்பரத்திற்காக அதிக அளவு செலவு செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இது லாப மார்ஜினை பாதிக்கலாம்.
நாம் முன்னரே சொன்னது போல் நெஸ்லே பங்கு ஒன்றும் பெரிதளவு மலிவாக இல்லை. தற்போது மேலும் பத்து சதவீதம் உயர்ந்து விட்டதால் நாம் வேடிக்கை பார்ப்பதே நல்லது.
தொடர்புடைய கட்டுரைகள்:
மேகி தடையால் முதல் முறையாக நஷ்டம் கொடுத்த நெஸ்லே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக