இந்தக் கட்டுரையில் ம்யூச்சல் பண்டில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கணக்கிடுவது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.
இதற்கு முன் பங்குச்சந்தையில் கிடைக்கும் லாபத்திற்கு வரி கணக்கிடும் முறையைப் பற்றி எழுதி இருந்தோம்.
பார்க்க: பங்குச்சந்தை லாபத்திற்கு வரி உண்டா? (ப.ஆ - 16)
அதே போல் ம்யூச்சல் பண்டிலும் பங்குகளில் கிடைக்கும் லாபம் போல் Long Term Capital Gain (LTCG) வரி பயனை பெறலாம். ஆனால் இந்த பலன் எல்லா நிதிகளுக்கும் கிடைப்பதில்லை. சில நிபந்தனைகளுடன் சில பண்ட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
பொதுவாக ம்யூச்சல் பண்டை இரண்டு பெறும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
ஒன்று, Equity Mutual Fund
மற்றோன்று, Debts Mutual Fund
இதில் Equity Mutual Fund மூலம் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதி பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது 65%க்கும் குறையாமல் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது..
Debts Mutual Fundல் பணத்தின் பெரும்பகுதி அரசு பத்திரங்களில் நிலையான வருமானம் வருமளவு முதலீடு செய்யப்படுகிறது.
பங்குச்சந்தையில் முதலீடு செய்து நாட்டின் முதலீடுகளை பெருக்குவதற்கு Equity Mutual Fund முக்கிய காரணமாக அதற்கு மட்டும் மற்றதை விட அதிக வருமான வரி சலுகை வழங்கப்படுகிறது.
Equity ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்து ஒரு வருடத்திற்கு பிறகு லாபத்தை உறுதி செய்தால் LTCG வரி பலன்களை பெறலாம். அந்த லாபத்திற்கு வரி எதுவும் கிடையாது.
ஆனால் ஒரு வருடத்திற்கு முன்னரே ம்யூச்சல் பண்டை விற்று விட்டால் அது STCG பலனாக கருதப்படும். அதற்கு ப்ளாட்டாக 15% வரி கட்ட வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு லட்ச ரூபாயை Equity ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்து 30,000 ரூபாய் லாபம் அடைந்து இருப்பதாக கருதுவோம்.
அந்த நிதியை ஒரு வருடத்திற்கு முன்னரே விற்று விட்டால் முப்பதாயிரத்தில் 15% என்பது 4,500 ரூபாய் வரி கட்ட வேண்டும்.
அதே சமயத்தில் ஒரு வருடத்திற்கு பின்னர் விற்று விட்டால் வரி எதுவும் செலுத்த வேண்டிய தேவையில்லை.
சரி. இனி Debts Mutual Fund பிரிவிற்கு வருவோம்.
முன்னர் சொன்னவாறு இந்த நிதிக்கு வருமான வரி சலுகைகள் எதுவும் பெரிதளவு கிடையாது.
இந்த நிதியில் செய்த முதலீட்டை மூன்று வருடத்திற்குள் விற்று விட்டால் அதனை நமது மற்ற வருமானங்களுடன் இணைத்து அந்த ஸ்லாப்பில் எவ்வளவு வரி வருகிறதோ அதனை கட்ட வேண்டும்.
மூன்று வருடத்திற்கு பிறகு விற்றால் 10% பிளாட் வரி கட்ட வேண்டும். அல்லது Indexation பயன்களைப் பெறுவதாக இருந்தால் 20% வரி கட்ட வேண்டும்.
பார்க்க: நிலங்களை விற்கும் போது இப்படி வரியை சேமிக்கலாம் (Indexation)
உதாரணத்திற்கு ஒருவருக்கு மற்ற வருமானங்கள் மூலம் பத்து லட்ச ரூபாய் வருட வருமானம் வருகிறது.
இது போக, அவர் ஒரு லட்ச ரூபாயை Debts ம்யூச்சல் பண்டில் முதலீடு செய்து மூன்று வருடத்திற்குள் 30,000 ரூபாய் லாபம் அடைந்து விற்று விட்டார்.
அந்த சமயத்தில் அவரது மொத்த வருமானம் பத்து லட்சத்து முப்பதாயிரம் என்று கணக்கிட வேண்டும். அந்த ஸ்லாப்பில் செலுத்த வேண்டிய 20% வரியை இந்த முப்பதாயிரம் ரூபாய்க்கு செலுத்த வேண்டும். அதாவது ம்யூச்சல் பண்ட் லாபத்திற்கு 6,000 ரூபாய் வரி செலுத்த வேண்டும்.
அதே நேரத்தில் மூன்று வருடங்களுக்கு பிறகு விற்றால் இந்த முப்பதாயிரம் ரூபாய் லாபத்திற்கு 10% வரி செலுத்தினால் போதுமானது. அதாவது 3,000 ரூபாய் வரி செலுத்த வேண்டும்/.
மொத்தத்தில் Equity ம்யூச்சல் பண்ட் மற்றவற்றை விட அதிக வருமானமும், வரிப் பலன்களை தரும். ஆனால் Debts என்பதை விட கொஞ்சம் ரிஸ்க் அதிகம்.
தொடர்பான கட்டுரைகள்:
வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக