ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

PF பணத்தை பங்குச்சந்தையில் போடுவதால் நமக்கு எவ்வளவு பலன் கூடும்?

மாதந்தோறும் நமது சம்பளத்தில் ஒரு தொகை PF என்ற பெயரில் பிடித்தம் செய்யப்படுகிறது.


இதற்கு முன்னர், ஒன்பதரை வருடங்களில் அந்த தொகையை எடுத்து வேறு ஏதாவதற்கு பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தது. இதனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி எடுத்து வந்தனர்.



தற்போது அரசு குறிப்பிட்ட சதவீத தொகையினை மட்டுமே எடுக்கலாம் என்ற புதிய விதிமுறை கொண்டு வரவுள்ளது. இது போக, அந்த தொகையினை எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகளும் வந்து விட்டன.

பார்க்க:  PF பணத்தை எடுக்கும் போது இந்த தவறுகளை பண்ணாதீங்க..



அடுத்த செய்தியாக PF பணத்தின் ஒரு பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி. கடந்த வாரத்தில் ஐந்து சதவீத தொகையான 5000 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் முதலீட்டிற்கு வந்தது.

இந்த முதலீட்டின் பலன் அநேகமாக PF பணம் கட்டுபவர்களுக்கே வந்து சேரும்.

அதனால் இது கூடுதலாக நமக்கு எவ்வளவு பலனை தரலாம் என்ற ஆவல் நமக்கு இருக்கலாம். அதனை பற்றி ஒரு கணக்கீடாக பார்ப்போம்.

தற்போதைக்கு PF பணத்திற்கு வருடாந்திர வட்டியாக 8.75% தரப்படுகிறது.

PF பணம் என்பது பலரது ஓய்வு கால பணமாக இருப்பதால் அரசு கொஞ்சம் பாதுகாப்பாகவே அணுக முடிவு செய்து உள்ளார்கள்.

அதனால் 15%க்கும் மேல் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடாது என்று ஒரு விதிமுறை வகுத்துள்ளார்கள். சீனா போன்ற நாடுகளில் 30% அளவு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இது போக, நேரடியாக பங்குகளில் முதலீடு செய்யாமல் ம்யூச்சல் பண்ட்களில் வழியாக மட்டும் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.

அதில் SBI அரசு சார்ந்த ம்யூச்சல் பண்ட் நிறுவனமாக இருப்பதால் அவர்கள் மூலமாகத் தான் தற்போதைக்கு முதலீடு ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பங்குகளில் எதிர்பார்க்கும் லாபம் நமக்கு அப்படியே கிடைக்காது. ம்யூச்சல் பண்ட் ரிடர்ன் தான் கிடைக்கும்.

சராசரியாக ம்யூச்சல் பண்ட் ரிடர்ன் என்பதை 15% என்று எடுத்துக் கொள்வோம்.

அப்படி என்றால்,

5% முதலீட்டிற்கு ம்யூச்சல் பண்ட் மூலம் 15% ரிடர்ன் வரலாம்.

மீதி 95% முதலீடு நிலையான வருமானம் தரும் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அதன் வட்டி  8.75%.

இனி மொத்தத்தில் கிடைக்கும் வட்டியைக் கணக்கிடுவோம்.

0.05*15% + 0.95*8.75% = 9.06% வட்டி கிடைக்கும்.

அதாவது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் வருடத்திற்கு 0.30% வட்டி அதிகமாக கிடைக்கும்.



ஒரு வேளை, அடுத்த வருடம் உச்ச கட்ட வரம்பான 15% என்றால் அளவில் PF தொகை பங்குச்சந்தையில் செய்யப்பட்டால் கணக்கீடு இவ்வாறு மாறும்.

0.15*15% + 0.85*8.75% = 9.68% வட்டி கிடைக்கும்.

ஆக, பங்குச்சந்தையில் முதலீடு செய்வதால் உங்கள் PF பணத்திற்கு 0.25% முதல் 0.9% வரை கூடுதலாக வட்டி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ரிஸ்க் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பொதுவாக PF பணம் வைக்கப்படுவதால் இந்த கூடுதல் வட்டி சிறிது பயன் தரலாம்.

தொடர்பான கட்டுரைகள்:
மாத சம்பளத்தில் PF பிடித்த தொகை உயர்கிறது

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக