புதன், 19 ஆகஸ்ட், 2015

ம்யூச்சல் பண்ட் வாங்கும் போது கமிசன் செலவைக் குறைக்க ஒரு டிப்ஸ்

ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்யும் போது Expense Ratio என்பதும் ஒரு நிதியை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.


Expense Ratio என்பது அந்த பண்டை நிர்வாகம் செய்வதற்காக ம்யூச்சல் பண்ட் நிறுவனம் செலவழிக்கும் தொகை.



இது பொதுவாக இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் பண்ட் லாபம் அல்லது நஷ்டத்தில் சென்றால் கூட பிடித்தம் செய்யப்படும்.

இந்த சதவீதம் என்பது நம்மை சேர்த்து விடும் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்படும் கமிசன் தொகையும் சேர்த்து தான். நாம் முதலீடு செய்யும் தொகையில் ஒரு சதவீதம் வரை ஏஜெண்ட்களுக்கு கமிசனாக வழங்கப்படுகிறது.

ஆனால் 2013 முதல் ம்யூச்சல் பண்ட் நிறுவனங்கள் இந்த கமிசனை குறைக்கும் பொருட்டு அவர்களது ஒவ்வொரு பண்ட்டிலும் Direct Plan என்ற முறையை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.


இந்த Direct Plan முறை மூலம் முதலீடு செய்தால் ஏஜெண்ட் கமிசன் செலவை நாம் கொடுக்க வேண்டாம். அதனை நமது முதலீட்டில் சேர்த்து விடுவார்கள்.

Direct Plan முறையில் முதலீடு செய்வதற்கு நாம் நேரடியாக ம்யூச்சல் பண்ட் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு Axis வங்கியின் ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்வதாக இருந்தால் அவர்களது அலுவலகத்தில் சென்று பண்ட்களை வாங்க வேண்டும். அல்லது அவர்கள் வெப்சைட் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

Direct Planல் NAV மதிப்பு என்பது வேறுபடும். ஆனால் பங்குகள் ரெகுலர் திட்டத்தைப் போலவே அதே விகிதத்தில் இருக்கும்.

இவ்வாறு Direct Planல் முதலீடு செய்வதால் கிட்டத்தட்ட நமது முதலீட்டில் 1% வரை சேமிக்கலாம். அதாவது உங்கள் Expense Ratio ஒன்றரை சதவீதம் அளவு குறைந்து விடும்.


ஒரு சதவீதம் என்பது சிறியதாக தோன்றினாலும் SIP முறையில் மாதாந்திரமோ அல்லது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு இந்த திட்டம் அதிக பலனளிக்கும்.

ஏனென்றால் மற்ற முறைகளில் ஒவ்வொரு வருடமும் ஒரு சதவீதம் நம்மை சேர்த்து விட்ட ஏஜெண்ட்டுக்கு சென்று விடும். இதனால் நீண்ட கால அளவில் ஒரு பெரிய தொகையினை இழந்து இருப்போம்.

உதாரணத்திற்கு ஒரு லட்ச ரூபாயை ஒரு ம்யூச்சல் பண்ட்டில் 15 வருடங்களுக்கு திட்டம் போட்டு முதலீடு செய்கிறோம்.

அது புரோக்கர் வழியாக சென்ற ரெகுலர் திட்டத்தில் 15 வருடங்களுக்கு பிறகு 7.13 லட்சம் தரும்.

அதே நேரத்தில் கமிசன் இல்லாத Direct Plan ம்யூச்சல் பண்ட் 15 வருடங்களுக்கு பிறகு 8.13 லட்சம் தரும்.

ஆக, ஒரு லட்ச ரூபாய் Direct Planல் அதிகம் கிடைக்கிறது. இது கண்டிப்பாக பெரிய தொகை தானே.



ஆனாலும் கமிசன் குறைகிறது என்று தெரியாத ம்யூச்சல் பண்ட்களில் முதலீடு செய்வது ரிஸ்காக முடியும். ஏனென்றால் ம்யூச்சல் பண்ட்டும் பங்கு வர்த்தகத்துடன் நேரடி தொடர்பு உடையது.

அதனால் ம்யூச்சல் பண்ட்களில் முதலீடு செய்யும் போது ஒரு அடிப்படை அறிவை பெற்று நல்ல பண்ட்டை தேர்வு செய்வது என்பது மிகவும் அவசியமானது.

பார்க்க:   Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. நீங்கள் உதாரணத்திற்கு சொல்லும் Axis வங்கி சேலம் கிளை , Mutual Fund பிரிவுக்கு சென்றால் ! , வேற்று கிரக வாசி போல நடத்துகிறார்கள் . முதலீட்டாளர்களை மதிக்காமல் இயந்திரம் போல நடந்து கொள்கிறார்கள்

    பதிலளிநீக்கு