திங்கள், 3 ஆகஸ்ட், 2015

சிகரெட் படுப்பதால் நுகர்வோர் துறையில் கவனம் செலுத்தும் ஐடிசி

இந்தியாவில் நூற்றாண்டு கடந்த நிறுவனங்களுள் ஒன்று ஐடிசி. பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.


ITC என்பதன் விரிவாக்கம் ஆரம்பத்தில் Imperial Tobacco Company என்றே அழைக்கப்பட்டது.



ஆனால் நேருவின் சோசியலிஸ்ட் அரசு கொடுத்த அழுத்தத்தால் பிரிட்டிஷ் அமெரிக்கன் நிறுவனம் தங்களிடம் இருக்கும் பங்கை குறைக்க வலியுறுத்தப்பட்டது..

அதற்கு பதிலாக சந்தையில் பொது மக்களிடமும், உள்நாட்டு நிதி நிறுவனத்திலும் அதிக பங்குகள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது.

அதன் பிறகு  ITC என்பதன் விரிவாக்கம் Indian Tobacco Company என்று மாற்றம் செய்யப்பட்டது.

இது வரை இந்திய சிகரெட் துறையில் ஒரு மோனோபோலியாகத் தான் இருந்து வந்தனர். இந்தியாவின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றாக கருதப்பட்டது. வில்ஸும், கோல்ட் பிளேக்கும் அந்த அளவு பிரபலமாக இருந்தது.

ஆனால் சிகரெட் ஏற்படுத்திய புற்றுநோய் போன்ற பாதிப்புகள் காரணமாக அரசுக்கு அதிக அளவில்  NGOக்கள் மூலம் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து வரியைக் கூட்டி சென்றது.

தற்போது ஒரு சிகரெட் விலை மட்டூம் பத்து ரூபாய்க்கு அருகில் வந்தது ITC நிறுவனத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

மேலும், சிகரெட் கவரில் 85% அளவு புகைப்படம் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தாய்லாந்தில் இந்த மாதிரியான சிகரெட் கவரை பார்த்த அனுபவம் உண்டு. அவ்வளவு கோரமான புகைப்படத்தை பார்த்த பிறகு எவரும் சிகரெட் பிடிக்க மாட்டார் என்பதே உண்மை.

இப்படி பல விதமான காரணங்களால்  கடந்த சில வருடங்களாக ஐடிசியின் வியாபார வளர்ச்சி படுத்துள்ளது.

இந்த வருடமும் சிகரெட் மூலம் வருமானம் கூடியுள்ளது. ஆனால் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் ஐடிசி வேறு சில நுகர்வோர் துறை தயாரிப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்பே கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாலும், விற்பனை வளர்ந்த அளவு லாபம் கூடவில்லை. பல தர்யாரிப்புகள் நஷ்டம் கொடுத்து வருகின்றன.

ஆஷிர்வாத் கோதுமை பொடி, பாங்கோ, ஐடிசி ஹோட்டல்ஸ், வாழ்த்து அட்டைகள், பத்தி பொருட்கள் என்பவை சில உதாரணங்கள்.

தற்போதைக்கு 40% வருமானம் சிகரெட் அல்லாதவற்றில் வருகிறது.  ஆனால் பெரும்பாலான 80% லாபம் சிகரெட் மூலமே வருகிறது.

இந்த நிலையில் முதலீட்டாளர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக சிகரெட் அல்லாத துறைகளை லாபமாக்க மாற்றுவதற்கு ஐடிசி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.



இனி வரும் வருடங்களில் பெரிய அளவில் ஐடிசி நிறுவனத்தின் வியாபர தந்திரங்கள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

தனிப்பட்ட விதமாக சமூக நல முதலீட்டு காரணத்தால் நாம் சிகரெட் துறையில் முதலீடு செய்வதில்லை.

பார்க்க:
பங்குச்சந்தையில் சமூக அக்கறையுடன் தவிர்க்க வேண்டிய பங்குகள்

ஆனால் பொதுவாக பார்த்தால் இந்த நிறுவனம் மற்ற நுகர்வோர் நிறுவனங்களை விட நல்ல மலிவான மதிப்பீடலில் வந்துள்ளது. தற்போதைய பங்கு விலை 330 ரூபாய் அருகில் வருகிறது.

நிறுவனத்தின் சக்தியை வைத்து பார்த்தால் இந்த கடின சூழ்நிலையில் இருந்து புதிய தயாரிப்புகள் மூலம் மீள வாய்ப்பு அதிகம்.

அதனால் விரும்புவர்கள் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக