வியாழன், 27 ஆகஸ்ட், 2015

மேற்கிலிருந்து நல்ல செய்தி, நாளை சந்தை உயர வாய்ப்பு

ஒரு வாரமாக சீனா என்ற புயல் தொடர்ந்து அடித்து வந்ததால் சந்தை துவண்டு போய் கிடந்தது. இந்த சூழ்நிலையில் மேற்கில் இருந்து வரும் தென்றல் போன்ற செய்தி நாளை சந்தையை சிறிது மீள வைக்கலாம்.


42 டாலருக்கு அருகில் சென்ற கச்சா எண்ணெய் விலை இன்று மட்டும் 10% உயர்வை சந்தித்தது. இறுதியில் 46$ அருகே நிலை பெற்றுள்ளது.



நைஜீரியாவில் நடந்து வரும் சண்டையில் முக்கிய எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிந்ததால் எண்ணெய் வெளிவரத்து பாதிக்கப்பட்டது. இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

குண்டு போட்டு எண்ணெய் விலை குறைந்ததை நாம் சந்தோசமான நிகழ்வு என்று எடுத்துக் கொள்ள முடியாது. முறையான விலை குறைவு என்றும் எடுத்துக் கொள்ள முடியாது.

அதே வேளையில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியைக் குறைக்க ஆரம்பித்துள்ளன. இதனை ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கலாம்.

ஒரே அடியாக எண்ணெய் விலை குறைந்தாலும் அது ஒரு பொருளாதார தேக்கத்தின் அறிகுறியாக பார்க்கப்படுவதால் இந்த விலை உயர்வு மேற்கு சந்தையில் ஒரு நல்ல சகுனமாக பார்க்கப்பட்டது.

அடுத்து, அமெரிக்க ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளது. 2.3% அளவு தான் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3.7% அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது. அதே வேளையில் வேலையில்லா விகிதமும் கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் அமெரிக்க சந்தை இரண்டு சதவீத அளவு உயர்வை சந்தித்தது. இந்திய ஐடி நிறுவன பங்குகளுக்கு இது ஒரு மகிழ்வான செய்தியாகவே இருக்கும்.

இந்த மீழ்ச்சி நாளை இந்திய சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது. நாளை காலை ஆசிய சந்தைகளை பார்க்கும் போது இதனை ஓரளவு யூகித்து விடலாம். பார்ப்போம்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக