திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வட்டி விகிதக் குறைப்புக்கு ராஜன் தரும் குறிப்பு

கடந்த வாரம் சீனா ஏற்படுத்திய பாதிப்பால் ரூபாய் மதிப்பு ஐந்து சதவீத அளவு வீழ்ச்சி அடைந்தது.


ரூபாய் மதிப்பைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் வட்டி விகிதத்தை குறைக்காமல் ரூபாய் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவே முயலுவார் என்று தான் எதிர்பார்த்து இருந்தோம்.



ஆனால் அவரது நேற்றைய பேட்டி வேறு விதமாக யோசிக்க வைத்தது.

நாங்கள் காத்திருந்து கண்காணிக்கும் நிலையில் தான் இருக்கிறோம். ஆனால் பணவீக்கம் நாங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைந்து வருகிறது என்று கூறி உள்ளார்.

இந்த பேட்டியை வட்டி விகிதக் குறைப்புக்கு சாதகமாகவே ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். மேலும் சீனா வீழ்ச்சியை பெரிதளவு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், உள்நாட்டுக் காரணிகளே ரிசர்வ் வங்கி முன் முக்கியமாக தெரிகிறது.

தற்போது சந்தையை மேலே தூக்கி நிறுத்தும் காரணிகள் ஏதும் இல்லாததால் சந்தை பெரிதளவு வீழ்ச்சியில் இருந்து மீளவில்லை.

ஆனால் செப்டம்பர் இறுதியில் வட்டி விகிதக் குறைப்புகள் தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டால் சந்தை நேர்மறையாக அணுகும்.

அதே போல் பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தில் GST வரியும் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் கிடைக்கப்பெற்றால் சந்தை சாதகமாக அணுகும்.

அது வரை கடலில் அலை போன்று மேலும் கீழும் மிதக்கும் சந்தையைத் தான் பார்க்க முடியும்.

இதில் தற்போது சென்செக்ஸ் நிறுவனங்களின் P/E மதிப்பு 18க்கு அருகில் வந்து இருப்பதைக் கவனிக்க. இது கடந்த பத்து வருடங்களில் சென்செக்ஸ் சராசரி P/E மதிப்பை விடக் குறைவாக இருக்கும்.

அப்படி என்றால், தற்போதைய நிலை சந்தையில் நல்ல மதிப்பீடலில் பங்குகளை வைத்து இருக்கிறது.

மோடி வருவதற்கு முன் சந்தையில் முதலீடு செய்தவர்கள் கணிசமான ரிடர்னை பெற்றார்கள். அதற்கடுத்து தற்போது தான் நல்ல மதிப்பீடலில் சந்தை வந்துள்ளதாக கருதப்படுகிறது.

அதனால் நீண்ட கால நோக்கில் சந்தையில் முதலீடு செய்பவர்கள் தொடரலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக