Guest Blogging, By Raja, Vellore
நண்பர் ராஜா அவர்கள் பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை? என்ற புத்தகத்தை படித்து விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!
சமீபத்தில் "பணத்தை இழக்க சிறந்த இடம் பங்குசந்தை" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. பிரமாதம். ஒவ்வொரு பக்கங்களிலும் சுவராசியம்.
பங்கு சந்தையில் அள்ள அள்ள பணம் என நினைத்து பங்கு சந்தைக்கு வருபவர் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்.
பங்குச்சந்தையை பற்றிய அறிமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து பங்குச்சந்தை, F&O, currency trading, commodities, hedging போன்ற பலவற்றை விவரிக்கிறது.
பங்குச்சந்தையை பற்றிய அறிமுகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து பங்குச்சந்தை, F&O, currency trading, commodities, hedging போன்ற பலவற்றை விவரிக்கிறது.
இதில் Mr.x என்பவர் Cash marketல் வர்த்தகம் செய்து நட்டமடைந்து, அதன் பின் F&O வர்த்தகத்திலும் நட்டமடைந்து விடுகிறார். தொடர்ந்து commodity, currency trading போன்றவற்றிலும் மொத்த பணத்தையும் இழந்து, அதனை ஈடுகட்ட கடன் வாங்கி அதையும் இழந்து விடுகிறார்.
அதற்காக வீட்டில் பொய் சொல்லி, மனைவியின் நகையை அடமானம் வைத்து அதையும் இழந்து நடுத்தெருவுக்கு வருகிறார்..... அருமையாக சிறந்த எடுத்துக்காட்டுக்களோடு விளக்கியுள்ளார்...ஆசிரியர் பிலால்.
Trading செய்வதால் பணம் இழந்து, பொய் சொல்லி கடன் வாங்கி, போதை பழக்கத்துக்கு அடிமையாகி, வேலையிழந்து, அவமானம் படம் வேண்டியிருக்கும் என விஜயகாந்த் போல புள்ளி விவரங்களுடன் விவரிக்கிரார்.
Trading செய்வதால் பணம் இழந்து, பொய் சொல்லி கடன் வாங்கி, போதை பழக்கத்துக்கு அடிமையாகி, வேலையிழந்து, அவமானம் படம் வேண்டியிருக்கும் என விஜயகாந்த் போல புள்ளி விவரங்களுடன் விவரிக்கிரார்.
IPO, Gray market, SEBI என அனைத்திலும் ஊழல் உள்ளது என்கிறார். உதாரணமாக... Reliance power IPO... 200 கோடிமுதலீடை திரட்டுவதற்கு 12000 கோடி ரூபாய்க்கு பங்குகளை 415 ரூபாய்க்கு வைத்தார்கள்... இது முற்றிலும் அம்பானி என்பதால்தான்... என்பது போல பல சம்பவங்களை புள்ளி விவரங்களுடன் விவரிக்கிரார்.
2008 பங்கு சந்தை இறங்கியபோது பலர் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்துகொண்டனர். அதில் ஒருவர் ... "all of my life time savings gone, i dont know how to save my family"......மனதை தொட்டுவிட்டது!
சந்தை இறங்கும் போது, அகமதாபாத் ல் உள்ள ஒரு ஏரியில் போலிஸ் பாதுகாப்பு போடுவார்களாம்... தற்கொலையை தடுப்பதற்காக!!!
Gray market ன் ஊற்றிடம் அகமதாபாத் ம். அங்கேதான் ipo வின் விலையை சூதாடிகள் நிர்ணயிக்கிறார்களாம்.
கடைசியில் பங்கு சந்தையில் முதலீடு மட்டுமே செய்யுங்கள். அரசு நிறுவனங்களை மட்டுமே வாங்குங்கள்... என முடிக்கிறார்.

நான் பங்கு சந்தையில் புதியதாக வரும்பாது என்னென்ன நடந்ததோ அதை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார். பங்குச்சந்தை என்றால் லாபம் மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் வருகிறவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
பங்குச்சந்தை பற்றி எதுவுமே தெரியாதவர்கள் இதை படித்தார்கள் என்றால் சத்தியமாக இந்த ஜன்மத்தில் பங்குச்சந்தையின் பக்கம் தலைவைத்துகூட படுக்கமாட்டார்கள். இத்தனைக்கும் நூலாசிரியர் ஒரு share market sub broker......
கீழே உள்ள இணைப்புகளில் ஆன்லைனில் கிடைக்கிறது.
ஆசிரியர் குறிப்பு: இந்தக் கட்டுரையின் ஆசிரியர் ராஜா அவர்கள் வேலூரை பூர்வீகமாகக் கொண்டு இந்திய பாதுகாப்பு துறைக்காக டெல்லியில் பணிபுரிந்து வருகிறார். பங்குச்சந்தை முதலீட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்.
தொடர்பான கட்டுரைகள்:
- Panathai Izhakka Sirantha Idam Pangusanthai (Amazon)
- http://www.noolulagam.com/product/?pid=6191
- https://www.nhm.in/shop/
1000000004932.html
தொடர்பான கட்டுரைகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக