வியாழன், 13 ஆகஸ்ட், 2015

ஸ்பெக்ட்ரத்தை பகிர்வதால் மகிழ்ச்சியில் டெலிகாம் நிறுவனங்கள்

டெலிகாமை பொறுத்தவரை ஸ்பெக்ட்ரம் என்பது அதிமுக்கியத்துவம் பெறுகிறது.


இதனை அரசிடம் இருந்து ஏலமாக பெறுவதற்கு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கின்றன.



ஆனால் செலவழித்து வாங்கிய பிறகு சில நிறுவனங்கள் அந்த அலைவரிசையை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போகும் சூழ்நிலைகள் அவ்வப்போது வருகிறது.

அந்த சமயத்தில் அவர்கள் வாங்கிய ஸ்பெக்ட்ரம் யாருக்கும் பயன்படாத நிலையிலே இருக்கும்.

இதனால் டெலிகாம் நிறுவனங்கள் தங்களுக்குள் வாங்கிய ஸ்பெக்ட்ரத்தை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்து இருந்தன.

தற்போது இது ஒரு முடிவிற்கு வந்துள்ளது.

இதன்படி ஒரே அலைவரிசை பேண்டில் லைசென்ஸ் வாங்கிய நிறுவனங்கள் தங்களுக்குள் ஸ்பெக்ட்ரத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

பகிரும் நிறுவனம் வாங்கும் நிறுவனத்தின் வருவாயில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெறும்.

இதனால் கடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அதிக அளவில் லைசென்ஸ் வாங்கி குவித்து வைத்து இருக்கும் ஏர்டெல், ஐடியா போன்றவை அதிக அளவு பயன் பெறும்.

இந்த நிறுவனங்கள் தங்கள் ஸ்பெக்ட்ரத்தை மொத்தமாக லீஸ் முறையில் விடக்கூடாது என்பது முக்கியமான நிபந்தனை.

இதனால் டெலிகாம் பங்குகள் நேற்று உயர்வை சந்தித்தன.

இவ்வாறான ஸ்பெக்ட்ரம் பகிர்வால் நுகர்வோர்களுக்கு நல்ல செயல் திறனில் கால் மற்றும் டேட்டா சேவைகள் அளிக்க முடியும்.

வரும் காலங்களில் 4G. 5G சேவைகளுக்கு இந்த பகிர்வு பேருதவியாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்:
ஏன் 900MHz ஸ்பெக்ட்ரத்தை நோக்கி நிறுவனங்கள் ஓடுகின்றன?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக