ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

பழைய வாகனங்களை மாற்றினால் அரசு தரும் ஊக்கத் தொகை

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மோடி அரசு ஒரு திட்டத்தினைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.


இது ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் அளவிற்கு அரசுக்கு பயனாக இருக்கும்.



மேற்கத்தியர்கள் போல் ஓய்ந்த பொருளை அப்புறப்படுத்தும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு கிடையாது.

இதனால் நமது ஊரில் காலங்கடந்த வண்டிகள் பஞ்சர், டிஞ்சர் போட்டு ஓடிக் கொண்டு இருப்பதை எங்கும் காணலாம்.

ஆனால் இந்த வாகனங்கள் விடும் புகை மற்றும் இரைச்சல்களால் சுற்றுப்புறம் கணிசமாக மாசடைகிறது.

இதற்காக விழிப்புணர்வு மட்டும் நடத்தி பயனில்லை என்ற முடிவுக்கு அரசு வந்து விட்டது.

அதனால் நம்மிடம் பத்து வருடம் கடந்து இருக்கும் பழைய வாகனங்களை மாற்றி புதியதை வாங்கினால் அரசு மானியம் வழங்க இருக்கிறார்கள். அதனுடன் சில வருமான வரிப் பலன்களையும் கொடுக்க திட்டமுள்ளது.

அதாவது,

பழைய வாகனங்களை வாங்கும் போது ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். அந்த சான்றிதழை புதிய வாகனம் வாங்கும் போது கொடுத்தால் அரசின் சலுகைத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

கார் போன்ற சிறிய வாகனங்களுக்கு 30,000 ரூபாய் வரை சலுகை கிடைக்கும்.

டிராக்டர், லாரி போன்ற பெரிய வாகனங்களுக்கு 50,000 ரூபாய் வரை சலுகை கிடைக்கும். இந்த பெரிய வாகனங்கள் வாங்குபவர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கும் பெற்றுக் கொள்ளலாம்.

இதனால் அரசுக்கு ஒரு வகையில் சுற்றப்புறம் மாசடைதலைக் குறைக்கலாம். புதிய வாகனங்கள், நவீன தொழில் நுட்பங்கள் புகையை பெரிதளவு குறைக்க உதவும்.

அதே நேரத்தில் மக்கள் புதிய வாகனங்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டும் வாய்ப்பும் இருப்பதால் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

இன்னும் திட்டம் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது. அமலுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக