வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பதற்றத்தில் இந்திய சந்தை

இந்த முறை உலக காரணிகளின் சரிவை சீனா ஆரம்பித்து வைத்துள்ளது.


சீனா தனது நாணய மதிப்பை செயற்கையாக குறைக்க போய் அது டாலரின் தேவையை கணிசமாக அதிகரித்து உள்ளது.



இதனால் மற்ற வளரும் நாடுகளின் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டு அவர்கள் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

மலேசியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் கரன்சிகள் பதினைந்து வருடத்தில் இல்லாத அளவு தாழ்வு நிலையை அடைந்துள்ளது.

அது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 65 ரூபாய்க்கும் மேல் சென்றுள்ளது. நான்கு வருடங்களில் இல்லாத ரூபாய் வீழ்ச்சியாக கருதப்படுகிறது. மற்றவர்களுக்கு கொஞ்சம் பரவாயில்லை.

இன்னும் வீழ்ச்சி ஏற்பட்டு 66 ரூபாயை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டளார்கள் தங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை திரும்ப பெற ஆரம்பித்து உள்ளனர். நேற்று மட்டும் ஆயிரம் கோடி அளவு முதலீடு வெளியே சென்றுள்ளது.

இதனால் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் அந்நிய செலாவணியும் குறைய ஆரம்பித்துள்ளது.

பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதை தடுக்கும் பொருட்டு இந்த வட்டி விகிதக் குறைப்பை தள்ளிப் போடலாம் என்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இப்படி சீனாவின் ஒரு முடிவு உலக அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு வேளை பார்லிமென்ட் ஒழுங்காக நடந்து முக்கிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருந்தால் சந்தையும் வலுவான ஒரு தன்னம்பிக்கையை பெற்றிருக்கும். வலுவான காரணிகள் இருக்கும் போது வீழ்ச்சியும் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால் பொறுப்பில்லாமல் அமளி நடத்தி வளர்ச்சியை தாமதப்படுத்த வைத்துள்ளனர்.

பொருளாதார சீர்த்திருத்தும் மெதுவாக செல்கிறது என்றாலும் நமது அடிப்படை வளர்ச்சி என்பது வலுவாகவே உள்ளது. இங்கு தாமதம் தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது.

உற்பத்தி, பணவீக்கம், அந்நிய நிதி கையிருப்பு போன்றவை மற்ற நாடுகளை விட நல்ல நிலையில் உள்ளன.

அதனால் தற்போதைய புள்ளிகளில் மலிவாக பங்குகளை வாங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன என்றே சொல்லலாம்.

பார்க்க:
சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -1

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக