ஒரே நாளில் 1500 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு மேல் சரிவு.
இன்றைய சந்தை நிலவரம் பலருக்கு நெஞ்சடைப்பைக் கூட தந்திருக்கலாம். ஆனாலும் பொறுமை என்பது இந்தக் காலக்கட்டத்தில் தான் ஒரு முதிர்ச்சி அடைந்த முதலீட்டாளனுக்கு அவசியப்படுகிறது.
பார்க்க: சீனாவால் ரத்த வெள்ளத்தில் இந்திய சந்தை, என்ன செய்வது?
இரும்புத் திரையால் மூடப்பட்ட கம்யூனிச சித்தாந்த சீனாவில் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியே தெரிய பல காலம் பிடிக்கிறது. அதனால் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்த பொருளாதார மந்தம் தற்போது தான் வெளியே வந்துஉள்ளது. எவ்வளவு நாள் தான் பொய்களை மட்டும் சுமக்க முடியும்.
இன்னும் என்னென்ன மறைத்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.
ஆனாலும் நமக்கும் சீனாவிற்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதால் 2008ல் அமெரிக்காவால் நடந்த சரிவைப் போல் மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என்றே கருதலாம்.
இன்று கிட்டத்தட்ட எல்லா பங்குகளும் சரிந்துள்ளன. ஆனாலும் சில துறை சார்ந்த பங்குகளை பார்த்தல் தற்போதைய சூழ்நிலை நேர்மறை பலன்களை கொடுக்கவே வாய்ப்புள்ளது. அந்த பங்குகளும் இன்று சரிந்துள்ளதற்கு சந்தையின் பதற்றமே முக்கிய காரணமாக இருக்கும்.
முதலில் எண்ணெய் விலையை பார்த்தால் 45 டாலருக்கு அருகில் வந்துள்ளது. இதனால் உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
அதே நேரத்தில் பெயிண்ட் நிறுவனங்கள், எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள், உர உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் துறையில் கச்சா எண்ணையை மூலப் பொருளாக பயன்படுத்தும் நிறுவனங்கள் போன்றவை நேர்மறை பலன்கள் பெறும்.
அடுத்து, ரூபாய் மதிப்பு வீழ்ந்துள்ளது.
இதனால் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு நாணய மதிப்பு காரணமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி சார்ந்த மென்பொருள் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் அதிக பலனடைய வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் ஐரோப்பிய ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் நிறுவனங்களை தவிர்க்கலாம்.
அடுத்து சீனாவால் உலோகம், ரப்பர் போன்ற காமாடிட்டி விலைகள் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு சீனாவில் இருந்து வரும் மலிவான உற்பத்தி பொருட்களும் ஒரு முக்கிய காரணம்.
இந்த வருடமாவது சுரங்கத்தொழிலில் ஈடுபட்டு நிறுவனங்கள் மீளும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தற்போது மீழ்ச்சி தள்ளிப் போவது தவிர்க்க இயலாது என்றே தெரிகிறது. இந்த நிறுவனங்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
அடுத்து உள்நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உள்நாட்டு தேவை சார்ந்த இன்ஜினியரிங் நிறுவனங்கள், அரசின் கட்டுமான தொழில் சார்ந்த நிறுவனங்களின் மீழ்ச்சி பெரிதளவில் பாதிக்கப்படாது என்றே நினைக்கிறோம். இதனால் இந்த பங்குகளை வைத்துக் கொள்ளலாம்.
ஆக, சூழ்நிலையை சாதகமாக கொண்டுள்ள நிறுவன பங்குகள் இன்னும் நல்ல முதலீடே. அதே போல் உற்பத்தி விலைக்கு அருகில் வந்திருக்கும் தங்கமும் இந்த சூழ்நிலையில் நல்ல முதலீடே.
தற்போது பதற்றப்படாமல் சூழ்நிலையை அணுகுவதே நல்ல திசையில் நம்மை கொண்டு செல்லும்.
இந்த மாதம் ஓய்வு கருதி எமது போர்ட்போலியோ சேவையைத் தவிர்த்து இருந்தோம். ஆனாலும் அவசரம் கருதி Customized Portfolio சேவையை மட்டும் தருகிறோம். போர்ட்போலியோ தயார் செய்வதற்கு குறைந்தது ஒரு வார காலம் தேவையாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்..
முதலீடு கட்டண சேவை
தேவைப்பட்டால் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக