வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

Navkar IPOவை வாங்கலாமா?

வரும் ஆகஸ்ட் 24 முதல் Navkar Corporation IPO வரவிருக்கிறது. அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.


பங்குச்சந்தையில் ஆர்வம் அவ்வளவு இல்லாதவர்கள் கூட Navkar என்று கடந்த ஒரு மாதமாக உச்சரித்து வருவதை கடந்த ஒரு மாதமாக கவனித்து வருகிறோம். அதனால் ஏதோ ஒரு அதிரி புதிரியான ஆர்வம் ஏற்பட்டது என்பது உண்மை.



இந்தியாவில் பெரிதளவு வளர்ச்சி கொடுக்கவிருக்கும் துறை என்று அறியப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் துறையை சார்ந்த நிறுவனம் என்பதால் இயற்கையாகவே விளம்பரம் இந்த ஐபிஒவிற்கு கிடைத்தது.

இந்த நிறுவனம் கப்பல் மூலம் சரக்குகளை ஏற்றி இறக்கும் கண்டைனர் தொழிலில் உள்ளது.

ஆனால் கடந்த மூன்று வருடங்களின் நிதி நிலை அறிக்கையை பார்த்த பிறகு வருமானம் பெரிதளவு வளரவில்லை என்பது புரிந்தது. வெளியில் ஒரு பெரிதான ஹைப் கொடுக்கப்பட்டதால் கொஞ்சம் பொறுமை காக்கலாம் என்று தான் முடிவு செய்தோம்.

ஒரு வழியாக தகவல்களைப் பெற்றதில் கடந்த வருடத்தில் இருந்து லாபம் குறைவாக இருந்த ட்ரேடிங் என்ற தொழில் புரிவை மூடி விட்டார்கள். தற்போது அதிகம் லாப மார்ஜின் கொடுக்கும் சேவை பிரிவை மட்டும் வைத்துள்ளார்கள். இது தான் நிதி அறிக்கையில் எதிரொலித்தது.

ஆனாலும் நிதி அறிக்கையை கொஞ்சம் குழப்பமாகவே பார்க்க வேண்டி உள்ளது. புதிய ஐபிஒ என்பதால் மேலதிக தகவல்கள் பெறுவதும் கடினமாக உள்ளது. இனி சேவை பிரிவு மட்டும் எவ்வளவு வளர்ச்சி கொடுக்கும் என்பதைக் கண்டறிய முடியவில்லை.



பங்குச்சந்தையில் குழப்பம் என்று வந்தாலே பாதுகாப்பாக தவிர்க்கலாம் என்பது எமது தனிப்பட்ட விருப்பம்.

இந்த ஐபிஒவின் பங்கு விலை 147-155 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உச்சக்கட்ட விலையில் பார்த்தால் P/E மதிப்பு 23க்கு அருகில் வருகிறது. அதனால் மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் மதிப்பீடலில் மலிவாக வருகிறது.

இந்த காரணத்தால் கிரே மார்கெட்டில் 20% அதிக மதிப்பிலே பங்கு பரிமாறப்பட்டு வருகிறது.

மொத்தத்தில், அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் இந்த ஐபிஒவில் இணையலாம்.

தொடர்பான இடுகைகள்:
SYNGENE IPOவை வாங்கலாமா?

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக