இன்று வட்டிக் குறைப்பு தொடர்பான முடிவுகளை RBI எடுக்கும் நாள்.
இறுதியில், வட்டிக் விகிதங்களில் எந்த வித மாற்றம் செய்யப்படவில்லை. அதே வட்டி விகிதங்கள் தொடர்கின்றன.
தற்போதைக்கு CRR 4% அளவிலும், SLR 21.5% என்ற அளவிலும், Repo rate 7.25% என்றும் உள்ளது.
சந்தையும் பெரிதளவு வட்டிக் குறைப்பு ஏற்படும் என்ற நம்பிக்கையில் இல்லை என்றே விதத்திலே தயாராகி இருந்தது.
அதனால் அதிக அளவு எதிர்மறை தாக்கங்கள் ஏற்படவில்லை.
இதே நேரத்தில் RBI பணவீக்கம் நல்ல அளவில் உள்ளதாகவும், பருவமழை நம்பிக்கை தருவதாகவும் கூறிய கருத்துக்கள் சந்தைக்கு சாதகமான விடயங்கள்.
அதே போல் தொழில் துறை வளர்ச்சியும் சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறியுள்ளது. ஜூலை மாதத்தில் வாகன விற்பனை கணிசமாக கூடியுள்ளதை அதற்கு உதாரணமாக எடுத்துள்ளது.
நிதி முடிவுகளில் பிரிட்டானியா 66% அதிக லாபத்தைக் கொடுத்துள்ளது என்பது ஒரு முக்கிய செய்தியாக பார்க்கிறோம்.
அதே சமயத்தில் HCL உட்பட ஐடி கம்பனிகளின் லாப மார்ஜின் குறைவாக வருவது கவலைக்குரிய விடயமாகும்.
தற்போதைய நிலையில் சந்தையில் ஏற்படும் கீழ் நோக்கிய திருத்தங்களுக்கு நிப்டி மலிவாக இல்லை என்பதும், சில லாப உறுதிப்படுத்துதலுமே காரணமாக உள்ளது.
இன்னும் ஐநூறு சென்செக்ஸ் புள்ளிகள் கீழே வர வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
தொடர்பான கட்டுரைகள்:
CRR, Repo, Reverse Repo..அப்படின்னா என்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக