வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

ஏட்டிக்கு போட்டி அரசியலால் தாமதமாகும் வளர்ச்சி

கடந்த இரு வாரமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அப்படியே முடங்கி போய் உள்ளது.


சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடக்க வேண்டும் என்பது காங்கிரஸின் கோரிக்கை.ஆனால் அதற்கு பிஜேபி எதுவும் உருப்படியாக நடவடிக்கை எடுத்தது போலும் தெரியவில்லை.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளும் இல்லை.

பங்குச்சந்தை எதிர்பார்க்கும் முக்கியமான பில்களான GST, நில மசோதா போன்றவை முடங்கிப் போய் உள்ளன. மீண்டும் அவசர சட்டம் எல்லாம் வேலைக்கு ஆகாது. சாணக்கியதனமாக அந்த மசோதாக்களை நிறைவேற்றுவது ஆளுங்கட்சியான பிஜேபியின் ஒரு முக்கிய கடமையே.

பிஜேபிக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் அங்கு நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இரண்டு சபைகளின் கூட்டு தொடர் மூலம் தான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆனால் அதற்கு முன்னர் இந்த மசோதாக்கள் பெயருக்காவது ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு காங்கிரஸ் விடுவதாக இல்லை.

பாராளுமன்றமே பேசித் தீர்க்கத் தான். ஆனால் அமளியில் ஈடுபட்டு நடக்க விடாமல் செய்வதில் என்ன மாண்பு உள்ளது என்று தெரியவில்லை.

பிஜேபி கடந்த சமயத்தில் அமளியில் ஈடுபட்டதாலே நாங்க இப்ப அமளியில் ஈடுபடுகிறோம் என்று காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஏன் படுமோசமாக தோற்றது என்பதற்கு இன்னும் காரணங்களை அலசாமல் அமளியில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிரமறையாகவே முடியும்.

அதே வேளை இதே நிலையில் சென்றால் மோடி எதிர்பார்க்கும் வளர்ச்சி மந்தமாக செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இது பிஜேபிக்கு ஆபத்தாக முடியலாம்.

அமைதியாக இருக்கும் மாநில கட்சிகள் தான் இதில் ஆதாயமடைய வாய்ப்புகள் உள்ளன.

நாங்க நிறைய முதலீடு செய்து விட்டு வெயிட் பண்றோம். கொஞ்சம் ஆரோக்கியமாக அரசியல் பண்ணுங்க பாஸ்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக