செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

26% உயர்ந்த SYNGENE IPO பங்கு

பயோகான் நிறுவனத்தின் துணை நிறுவனமான SYNGENE நிறுவனத்தின் ஐபிஒவை பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க:  SYNGENE IPOவை வாங்கலாமா?




இன்று பங்குச்சந்தை பட்டியலுக்கு அந்த நிறுவனம் வந்தது.

எதிர்பார்த்தது போலவே நல்ல உயர்வை காண்பித்தது.

ஐபிஒ உயர்ந்த விலையான 250 ரூபாயில் இருந்து 316 ரூபாய்க்கு உயர்ந்தது.

இதனால் ஐபிஒவில் விண்ணப்பித்து பங்கு கிடைத்தவர்களுக்கு 26% வரை லாபம் குறுகிய காலத்தில் கிடைத்து இருக்கும்.

தனிப்பட்ட முறையில் கிடைக்காவிட்டாலும் எமது வாசக நண்பர்கள் சிலருக்கு கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்! வாழ்த்துக்கள்!

தற்போதைய பங்கு விலையில் மற்ற மருந்து பங்குகளின் மதிப்பினை அடைந்து விட்டது. அதனால் குறுகிய காலத்தில் பெரிய உயர்வை எதிர்பார்க்க முடியாது.

அதனால் குறுகிய லாபத்தை உறுதி செய்பவர்கள் விற்று விடலாம்.

ஆனாலும், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்பது வரும் வருடங்களில் கொஞ்சம் வேகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இரண்டு, மூன்று வருட கால முதலீட்டிற்கு விருப்பம் உள்ளவர்கள் பங்கினை வைத்துக் கொள்ளலாம்.

நிறைய நிறுவனங்கள் அதிக அளவில் ஐபிஒவிற்கு பதிவு செய்துள்ளன. அதில் ஒரு நல்ல நிறுவனத்தை அடுத்த பரிந்துரையில் பார்ப்போம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக