செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

கூகிள் நிறுவனத்திற்கு புதிய தாய் நிறுவனம்

1999ல் ஆரம்பிக்கப்பட்ட கூகிள் இன்டர்நெட் துறையில் இன்னும் ஒற்றை ஆளாக கோலோச்சிக் கொண்டிருப்பது அறிந்ததே.


நேற்று அதன் நிர்வாக கட்டமைப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.கூகுளை பொறுத்த வரை ஆங்கில அகர வரிசையில் பார்த்தால் அணைத்து எழுத்துக்களிலும் ஒரு தயாரிப்பு சேவை வழங்கி வருகிறது. A முதல் Z வரை பல இன்டர்நெட் தொடர்பான சேவைகள் உள்ளன.

இந்த கருத்தை அடிப்படையாக வைத்தே புதிய நிறுவனத்திற்கு Alphabet என்று பெயர் வைத்துள்ளார்கள்.

Alphabet என்பது கூகுள் நிறுவனத்தின் புதிய தாய் நிறுவனமாக செயல்படும். இந்த நிறுவனம் எந்த வித தயாரிப்பு மற்றும் உற்பத்தி பணிகளை மேற்கொள்ளாது.

அதற்கு பதிலாக கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவன பிரிவுகளை மேற்பார்வையிடும் பணியினை மேற்கொள்ளும். இது போக நிதி மற்றும் பங்கு வர்த்தக நிகழ்வுகளை  Alphabet பார்த்துக் கொள்ளும்.

முந்தைய கூகுள் என்ற குடையின் கீழ் யூட்யூப், தேடு இயந்திரம், ஈமெயில், ஆந்திராயட், Adsense என்று பல பிரிவுகள் இயங்கி வந்தன. இவை தான் 90%க்கும் மேற்பட்ட வருவாயையும் வழங்கி வந்தன.

இந்த பிரிவுகள் அனைத்தும் கூகுள் என்ற பெயரிலே மீண்டும் இயங்கும். இதற்கு தமிழரான சுந்தர் பிச்சை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழராக ஒரு உயர்ந்த பொறுப்பை அடைந்து இருக்கும் அவருக்கு எமது வாழ்த்துக்கள்! அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இது தவிர கூகுள் GPS மூலம் ஆளில்லாமல் இயங்கும் கார், அதி வேக இன்டர்நெட் சேவை, முதலீட்டு நிறுவனம் போன்றவற்றை தொடர்பாகவும் ஆராய்ச்சி நடத்தி வந்தது.

இவை அனைத்தும் தனித்தனி நிறுவனங்களாக மாற உள்ளன. இவற்றிற்கு தனி சிஇஒ நியமிக்கப்பட உள்ளார்கள். இந்த பிரிவுகளின் வருமானம் குறைவாக இருந்தாலும் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான ஆராய்ச்சி பிரிவுகள். அதனால் இவற்றின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.கூகிள் நிறுவனரான லேர்ரி பேஜ் Alphabet நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக செயல்படுவார். அவரிடம் மற்ற துணை நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் ரிப்போர்ட் செய்வார்கள்.

வருடத்திற்கு நான்கரை லட்சம் கோடிக்கும் மேல் வருமானம் தரும் கூகிள் நிறுவனத்திற்கு இந்த மீள் கட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தொலைநோக்கில் எடுக்கப்பட்ட நல்ல முடிவு இது. தற்போது ஒவ்வொரு பிரிவிற்கும் அதன் பணி  என்ன என்பது தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக