செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

நேற்றைய சரிவால் ஐபிஒக்களின் மவுசு குறைய வாய்ப்பு

சீனர்களால் நேற்று இந்திய சந்தையில் ஏற்பட்ட சரிவு ஐபிஒக்களின் தேவையைக் கணிசமாக குறைக்கும் என்றே தெரிகிறது.


இதன் முதல் அறிகுறி நேற்று இந்தியன் ஆயில் பங்குகளில் எதிரொலித்தது.



மத்திய அரசின் நிறுவன பங்குகள் மூலமாக அரசு பணத்தை வெளிச்சந்தையில் திரட்டி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம் பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் திரட்டப்படும் என்று அறிவித்தனர்.

இந்த பணத்தை OFS (Offer For Sale) என்ற முறையில் நேற்று சந்தையில் பங்குகளை விற்பதாக அறிவித்து இருந்தனர். இதற்காக சந்தை விலையில் பங்குகளை 5% குறைவான தொகையில் தருவதாக அரசு சொல்லி இருந்தது.

ஆனால் சீனர்கள் புண்ணியத்தால் ஓபன் மார்கெட்டில் இந்தியன் ஆயில் பங்கு 4% சரிந்தது.

வெளிச்சந்தையில் அதே விலையில் கிடைப்பதால் அரசிடம் போய் ஏன் வாங்க வேண்டும் என்று ரீடைல் முதலீட்டாளர்கள் சும்மா இருந்து விட்டனர். வெறும் 18% அளவே பங்குகள் விற்பனையானது. கடைசியில் எல்ஐசி புண்ணியத்தால் 75% பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.

இதே நிலை ஐபிஒலும் எதிரொலிக்கலாம் என்றே கணிக்கிறோம்.

ஏனென்றால்,

ஐபிஒக்களில் விண்ணப்பித்து கிடைக்குமா கிடைக்காதா என்ற நினைப்பில் நமது பணமும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு அடைபட்டு இருக்கும்.

பல தரவுகள் நம்மிடம் இருப்பதால் வெளிச்சந்தையில் பல வருட காலம் உள்ள நிறுவனங்களை கணிப்பது என்பது ஐபிஒக்களை விட எளிது.

நேற்றைய சரிவு பல நல்ல நிறுவனங்களின் பங்குகளை 10%க்கும் மேல் கீழே இழுத்து விட்டுள்ளது. அதனால் அவை வெளிச்சந்தையிலே நல்ல மலிவான விலையில் கிடைக்கின்றன.

இவ்வாறான காரணங்களால் தற்போதைய சூழ்நிலையில் வெளியில் உள்ள பங்குகளை பயன்படுத்திக் கொள்வதே நன்றாக இருக்கும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக