இன்று சந்தை ஆயிரம் சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு சீனா ஆரம்பித்து வைத்து இருக்கும் பொருளாதார தாக்கங்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் ஒரு நடுநிலையான பொருளாதார அமைப்பு இல்லாது வரை இந்த மாதிரியான சீர்குலைவு ஏற்படத் தான் செய்யும்.
நாடுகள் தங்கள் இஷ்டம் போல் கரன்சி, வட்டி விகிதங்களை கூட்டிக் குறைத்து வருகின்றன. இவ்வாறு செயற்கையாக ஏற்படும் மாற்றங்களின் எதிர்வினைகள் ஒன்று கூடி ஒரு நாள் போட்டுத் தாக்குகின்றன.
சீனாவின் நாணயக் குறைப்பு டாலர் மதிப்பைக் கணிசமாக கூட்டி உள்ளது. அது பல வடிவங்களில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
இதனைப் பற்றி விவரமாக நாம் அண்மையில் தான் எழுதி இருந்தோம். அதனைப் படிப்பது இந்த சூழ்நிலையில் உதவும்.
பார்க்க:
டாலர் வலுவானதால் பல வளரும் நாடுகளின் நாணயங்கள் தங்கள் வலுவை இழந்து வருகின்றன. அதிலும் ஆசியா நாடுகள் தான் இந்த சூழ்நிலையில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்தியா ஓரளவு நல்ல அடிப்படைகளைக் கொண்டிருந்ததால் இது வரை வீழ்ச்சியில் இருந்து தப்பி வந்தது.
ஆனால் தற்போது மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இது வேலைக்கு ஆகாது என்று பணத்தை திருப்பி எடுத்துள்ளனர். உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் நமது ஏற்றுமதி சந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
அதனால் தான் கடந்த ஒரு வாரமாக சந்தை இரண்டாயிரம் புள்ளிகள் வரை இழந்து உள்ளது.
ஆனாலும் அரசு சார்பாக பெரிய அளவிலான முன்னேற்ற நடவடிக்கைகள் இல்லை என்பதை தவிர அடிப்படைகளில் பெரிய அளவு குறைகள் காண முடியவில்லை. பணவீக்கம், அந்நிய செலாவணி போன்றவை இன்னும் கட்டுக்குள்ளே இருக்கின்றன.
உலக அளவில் எண்ணெய் விலை குறைந்துள்ளது முழுக்க இந்தியாவிற்கு சாதகமான விடயமாகவே பார்க்கலாம்.
அதனால் சந்தை மீண்டும் 27,000 என்ற இலக்கை கடக்கும் என்றே நம்புகிறோம்.
இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை காப்பாற்றவே முயலும். அதனால் வட்டி விகிதங்களை குறுகிய காலத்தில் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்றே கருதலாம்.
இந்த வருட இறுதி வரை சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியாது என்பதே எமது தனிப்பட்ட கணிப்பு. அதே நேரத்தில் சந்தையில் உள்ள பணம் தங்கத்தை நோக்கி சிறிது காலம் போகவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் இரண்டு, மூன்று வருடங்களுக்கு இந்திய சந்தை நல்ல ரிடர்னைக் கொடுக்கலாம். அவர்களுக்கு இன்று நல்ல வாங்கும் வாய்ப்பு..
பார்க்க:
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பதற்றத்தில் இந்திய சந்தை
இதற்கு சீனா ஆரம்பித்து வைத்து இருக்கும் பொருளாதார தாக்கங்களே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் ஒரு நடுநிலையான பொருளாதார அமைப்பு இல்லாது வரை இந்த மாதிரியான சீர்குலைவு ஏற்படத் தான் செய்யும்.
நாடுகள் தங்கள் இஷ்டம் போல் கரன்சி, வட்டி விகிதங்களை கூட்டிக் குறைத்து வருகின்றன. இவ்வாறு செயற்கையாக ஏற்படும் மாற்றங்களின் எதிர்வினைகள் ஒன்று கூடி ஒரு நாள் போட்டுத் தாக்குகின்றன.
சீனாவின் நாணயக் குறைப்பு டாலர் மதிப்பைக் கணிசமாக கூட்டி உள்ளது. அது பல வடிவங்களில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
இதனைப் பற்றி விவரமாக நாம் அண்மையில் தான் எழுதி இருந்தோம். அதனைப் படிப்பது இந்த சூழ்நிலையில் உதவும்.
பார்க்க:
- சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?
- சீனாவின் யுவான் மதிப்பு குறைப்பு எவ்வாறு நம்மைப் பாதிக்கும்? -1
இந்தியா ஓரளவு நல்ல அடிப்படைகளைக் கொண்டிருந்ததால் இது வரை வீழ்ச்சியில் இருந்து தப்பி வந்தது.
ஆனால் தற்போது மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இது வேலைக்கு ஆகாது என்று பணத்தை திருப்பி எடுத்துள்ளனர். உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் நமது ஏற்றுமதி சந்தையையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
அதனால் தான் கடந்த ஒரு வாரமாக சந்தை இரண்டாயிரம் புள்ளிகள் வரை இழந்து உள்ளது.
ஆனாலும் அரசு சார்பாக பெரிய அளவிலான முன்னேற்ற நடவடிக்கைகள் இல்லை என்பதை தவிர அடிப்படைகளில் பெரிய அளவு குறைகள் காண முடியவில்லை. பணவீக்கம், அந்நிய செலாவணி போன்றவை இன்னும் கட்டுக்குள்ளே இருக்கின்றன.
உலக அளவில் எண்ணெய் விலை குறைந்துள்ளது முழுக்க இந்தியாவிற்கு சாதகமான விடயமாகவே பார்க்கலாம்.
அதனால் சந்தை மீண்டும் 27,000 என்ற இலக்கை கடக்கும் என்றே நம்புகிறோம்.
இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை காப்பாற்றவே முயலும். அதனால் வட்டி விகிதங்களை குறுகிய காலத்தில் குறைக்கும் வாய்ப்பு இல்லை என்றே கருதலாம்.
இந்த வருட இறுதி வரை சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியாது என்பதே எமது தனிப்பட்ட கணிப்பு. அதே நேரத்தில் சந்தையில் உள்ள பணம் தங்கத்தை நோக்கி சிறிது காலம் போகவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் இரண்டு, மூன்று வருடங்களுக்கு இந்திய சந்தை நல்ல ரிடர்னைக் கொடுக்கலாம். அவர்களுக்கு இன்று நல்ல வாங்கும் வாய்ப்பு..
பார்க்க:
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பதற்றத்தில் இந்திய சந்தை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக