வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

LIC போனஸ் அறிவித்தது, எவ்வளவு கிடைக்கும்?

எல்ஐசி 2015ம் ஆண்டிற்கான வருடத்திற்கான போனசை அறிவித்துள்ளது. அதனைப் பற்றி கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.


நம்மிடம் வரும் இன்சுரன்ஸ் ஏஜெண்ட் இறந்தால் இவ்வளவு தொகை கிடைக்கும் என்று சொல்வதில்லை. அதனை நாம் அபசகுனமாக கருதுவதால் இருபது வருடம் கழித்து இவ்வளவு தொகை கட்டினால் இவ்வளவு கிடக்கும் என்று முதலீடாகத் தான் கூறுவார்.

அதனால் தான் பொதுவாக இந்தியாவில் காப்பீடுடன் முதலீடும் இன்சுரன்ஸ் திட்டங்களில் இணைக்கப்படுகிறது.



இவ்வாறு வரும் போது இரண்டு வித பதங்கள் நமக்கு பின்னால் கிடைக்கும் தொகையைப் பற்றி பாலிசியில் குறிப்பிடப்படுகின்றன.


இதனைப் பற்றி அறிந்து கொள்வதும் அவசியமானது.

ஒன்று Sum Assured,

பாலிசி முடிவதற்கு முன் நமக்கு இறப்பு ஏற்பட்டால் இந்த தொகை குடும்பத்தினருக்கு கிடைக்கும். அல்லது பாலிசி முடிந்த பிறகு குறைந்த பட்சம் இந்த தொகை கியாரண்டியாக கிடைக்கும். இதனைத் தான் Sum Assured என்று குறிப்பிடுகிறார்கள்.

இரண்டாவது Maturity Amount,

நாம் இன்சுரன்ஸில் போடும் பணத்தை எல்ஐசி அப்படியே வைத்துக் கொள்வதில்லை. அதனை பங்கு மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்கிறார்கள். அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி நமக்கு ஒவ்வொரு வருடமும் போனசாக வழங்கப்படும்.

இந்த போனஸ் தொகை சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் மாறுபடும். அவை நமது இன்சுரன்ஸ் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டு வரும்.

நமது பாலிசியின் காலம் முடிந்த பிறகு Sum Assured தொகையுடன் சேர்த்து போனஸ் தரப்படும். இடையில் பாலிசியைக் கட்டாமல் விட்டால் போனஸ் கிடைக்காது.

இதனைத் தான் Maturity Amount என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆக, Maturity Amount = Sum Assured + Bonus

எல்ஐசியைப் பொறுத்த வரை இந்த போனஸ் என்பதனை பல பிரிவுகளாக பிரித்துள்ளார்கள்.

இதில் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது.. Simple Revisionary Bonus

ஒவ்வொரு வருடமும் இந்த போனஸ் தொகை வழங்கப்படும். ஆனால் எல்ஐசியின் லாபத்திற்கு ஏற்ப இந்த தொகை மாறுபடும்.

உதாரணத்திற்கு Jeevan Lakshya என்ற பாலிசிக்கு ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 49 ரூபாய் போனசாக அறிவித்து உள்ளார்கள். ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்த தொகை வேறுபடுகிறது.

அப்படி என்றால் நமது Sum Assured மதிப்பு பத்து லட்சமாக இருப்பின் நாம் இவ்வாறு கணக்கிட வேண்டும்.

Bonus Amount = Bonus Rate X Sum Assured/1000

Bonus Amount = 49*(10,00,000/1000) = 49,000 ரூபாய்.

இந்த 49,000 ரூபாய். நமது கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டு பாலிசி முடியும் போது தரப்படும். இதே போல் ஒவ்வொரு வருடமும் போனஸ் தொகை சேர்த்துக் கொள்ளப்பட்டு வரும்.

ஒரு வேளை பாலிசியைக் கட்டாமல் முடித்து விட்டால் இந்த தொகை கிடைக்காது.



இது போக, நீண்ட காலத்திற்கு நாம் பாலிசியை வைத்து இருப்பதால் அதற்கும் Final Additional Bonus, Loyalty Additions என்ற பெயர்களில் போனஸ் தருவார்கள். ஆனால் இவை பாலிசி முடியும் தருவாயில் ஒரு முறை மட்டும் தரப்படும்.

கடந்த வருடம் பங்குச்சந்தை நன்றாக இருந்ததால் இந்த வருடம் கொஞ்சம் அதிக போனசை LIC அறிவித்துள்ளது.

இன்சுரன்ஸ் ஏஜெண்ட் ஒரு லட்சம் கட்டினால் இருபது வருஷம் கழித்து இரண்டு லட்சம் கிடைக்கும் என்று சொல்வதன் ரகசியம் இந்த போனஸ் தான்...

மேலும் எல்ஐசியின் போனஸ் விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
http://www.licindia.in/bonus_info.htm


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக