கடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவதற்கு ஒரு முக்கியமான காரணம் நிலக்கரி சுரங்க ஊழலும் கூட.
ஸ்பெக்ட்ரம் ஏலத்தை விட அதிக அளவில் முறைகேடுகள் நிலக்கரியில் நடைபெற்றன.
கடந்த ஆண்டு நிலக்கரி சுரங்க ஏலத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கவில்லை என்று கூறி 1993க்கு பின் நடந்த நிலக்கரி ஒதுக்கீடுகளை ரத்து செய்தது.
தற்போது இந்த நிலக்கரி சுரங்களுக்கான ஏலம் மீண்டும் நடந்து வருகிறது.
ஆனால் நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை போல் நியாயமாக நடத்த விடாது போல. தங்களுக்குள் கூட்டு சேர்ந்து போட்டியின்மையை உருவாக்கி வருகின்றன.
இந்த முறை 40 சுரங்களுக்கு ஏலம் நடைபெற்றது. அதில் மூன்று சுரங்கங்களுக்கு நடைபெற்ற ஏலத்தை அரசு ரத்து செய்து விட்டது.
இதில் Jindal Power நிறுவனத்திற்கு கிடைத்த சுரங்கங்களும் உள்ளடங்குகிறது.
Jindal நிறுவனம் குறைந்த தொகையில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக Adani Power, GMR என்ற இரண்டு நிறுவனங்களும் கடைசி நிமிடத்தில் ஏலத்தில் இருந்து விலகி விட்டன.
இதனால் Gare Palma என்ற சுரங்கம் போட்டியே இல்லாமல் கேட்ட தொகைக்கு ஜிண்டால் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது.
இந்த சுரங்க ஒதுக்கீட்டை தான் அரசு ரத்து செய்துள்ளது. இதனை எதிர்த்து ஜிண்டால் நிறுவனம் கோர்ட்டிற்கு சென்றுள்ளது.
கோர்ட்டில் ஆதாரங்கள் தேவை. ஆனால் கூட்டு சேர்ந்ததற்கான ஆதாரங்களை நிருபிப்பது என்பது அரசிற்கு எளிதல்ல.
அரசு Adani Power, GMR என்ற இரண்டு நிறுவனங்களிடமும் ஏன் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினீர்கள்? என்று கேட்டுள்ளது. ஆனால் எந்த பதில் சொல்லியும் தப்பி விடலாம் என்பதே உண்மை நிலை.
தவறே நடக்கிறது என்று தெரிகிறது. ஆனால் ஒன்றுமே செய்ய முடியாத சூழ்நிலை தான்.
தற்போதைக்கு எந்தவொரு நிலக்கரி நிறுவனத்தையும் நம்புவதிற்கில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே உள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கார்பரேட் நிறுவனங்களின் பங்கு என்பது மகத்தானது. ஆனால் நமக்கு அந்த பாக்கியம் இல்லை தான்.
தொடர்பான பதிவுகள்:

- பரபரப்பான தீர்ப்பில் பதறும் பவர் நிறுவனங்கள்
- புது நிலக்கரிக் கொள்கையால் யார் யாருக்கு லாபம்?
- நிலக்கரி ஊழல் தீர்ப்பில் நாம் என்ன செய்வது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக