திங்கள், 6 ஏப்ரல், 2015

இரட்டை சதம் கடந்த முதலீடு போர்ட்போலியோ

பல சமயங்களில் திட்டமிடப்படாத சில நிகழ்வுகள் நல்ல வழிகளைக் காட்டி விடுகின்றன.


முதலீட்டை பிரிப்பது எப்படி என்பதன் மூலம் ஆரம்பிக்கட்ட இந்த தளம் எதிர்பார்க்கப்படாத கோணங்களில் எல்லாம் சென்றது தளத்தை நடத்தும் எமக்கே ஆச்சர்யம் அளித்தது.



அது வரை எமது தனிப்பட்ட முதலீடுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நாம் ஏதேச்சையாக தான் நண்பர்கள் வேண்டுகோள்களால் சில பங்குகளை பரிந்துரை செய்ய ஆரம்பித்தோம். அது வரை கட்டுரை மட்டும் எழுதி காலத்தை ஓட்டி  விடலாம் என்று தான் நினைத்து இருந்தோம்.

சரி. பரிந்துரை செய்ததோடு மறந்து விடாமல் தொடர்ந்து கண்காணித்து வந்தால் தான் வாசகர்களுக்கு பயன்பெறும் என்ற நோக்கில் பங்குகளை இணைத்து போர்ட்போலியோ என்ற ஒன்றை உருவாக்கினோம்.

இந்த இலவச பங்குகளை பரிந்துரை செய்வதற்கு நாம் அதிக அளவில் மெனக்கெடவில்லை. ஏனென்றால் அது எமது தனிப்பட்ட போர்ட்போலியோ தான். சிறிய மாற்றங்களுடன்..

2012ம் ஆண்டு துவக்கத்தில் சந்தையின் போக்கு மாறலாம் என்று மனதில் ஏதோ பட்சி அடித்துக் கொண்டே இருந்தது. அதனால் எமது தனிப்பட்ட முதலீடுகளை பெருமளவில் சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்த நேரம். அதிலுள்ள 80% பங்குகளை வைத்து ஆரம்பித்தது தான் இந்த இலவச போர்ட்போலியோ.

இன்று இந்த இலவச போர்ட்போலியோ 200% லாபத்தைக் கடந்து விட்டது.


200% லாபம் கடந்த போர்ட்போலியோ 


டபுள் சதம் அடித்த கிரிக்கெட் வீரனை போல் நமக்கும் மகிழ்ச்சி கொஞ்சம் அதிகமாகத் தான் உள்ளது.

கிட்டத்தட்ட 15 நண்பர்கள் இலவச போர்ட்போலியோவை பின் தொடர்ந்து உள்ளார்கள் என்று அறிகிறேன். மகிழ்ச்சி!

பங்குச்சந்தை என்றாலே அண்ணாமலை பால்காரன் போல் ஒரே நாளில் பணக்காரன் ஆவது அல்லது எல்லாத்தையும் ஒரே நாளில் இழப்பது என்ற எண்ண நிலையில் இருப்பதை மாற்றி அமைக்க எம்மால் முடிந்த பங்கை கொடுக்கலாம் என்று நினைத்தோம்.

போர்ட்போலியோ வாங்கிய அடுத்த நாளே ஏன் கூடவில்லை என்று கேட்கும் நிலையை பெறாமல் இருந்ததில் இருந்தே ஓரளவு இந்த முயற்சி வெற்றி அடைந்தது.

இலவச போர்ட்போலியோ பிறகு ஆறு மாதங்கள் காத்து இருந்து தான் கட்டண சேவையை ஆரம்பித்தோம். அதுவும் நினைத்ததை விட அதிக அளவு வெற்றி அடைந்தது.

கடந்த வருடத்தில் கொடுக்கப்பட்ட எட்டு போர்ட்போலியோக்களுமே நேர்மறையில் சென்று வருகின்றன. கிட்டத்தட்ட 200 நண்பர்கள் போர்ட்போலியோவில் பயன் பெற்றுள்ளார்கள்.

வருமானம் என்பதையும் தாண்டி இந்த இடைவெளியில் வந்த அதிக அளவு நேர்மறை கருத்துக்கள் தான் தொடர்ந்து தளத்தை நடத்த தூண்டின.

பொதுவாக தமிழ் இணையத்தில் எதை எழுதினாலும் கலாய்த்து வீட்டுக்கு விரைவில் அனுப்பி விடும் சூழ்நிலை இருந்து வந்தது.

ஆனால் என்னவோ எமது வாசகர்கள் மிகவும் பொறுமையாகவே எமது தளத்தை எதிர்கொண்டார்கள். அது மொக்கை பதிவாக இருந்தாலும் கூட..:)

சில சமயங்களில் அரசியல் கலப்பு இருந்தால், விளம்பரங்கள் அதிகமாக இருந்தால் உரிமையுடன் எச்சரிக்கை வந்ததுண்டு. கேட்டு மாற்றியுள்ளோம்!

ஆக, எழுதுபவரோடு படிப்பவர்களும் இணைந்து நடத்தும் தளமாகவே முதலீட்டை நினைக்கிறோம். ஆதரவிற்கு நன்றி!

எமது அடுத்த போர்ட்போலியோ ஏப்ரல் 11 அன்று வெளிவருகிறது. இணையும் நண்பர்கள் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த இணைப்பினையும் பார்க்கலாம். முதலீடு கட்டண சேவை 


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்:

  1. வாழ்க! நமது தளம்! மிகச் சரியாக மதிப்பீடு செய்துள்ளீர்கள். உண்மையில் ஒரு பள்ளி மாணவனுக்கு அ,ஆ சொல்லிக்கொடுப்பது போல சந்தையின் போக்கை அவ்வப்போது கூறுகிறீர்கள். இதைத்தான் பல பல்கலைக்கழகங்கள் அஞ்சல் வழிக்கல்வி என்கின்றனர். தங்களுடைய கட்டுரைகளை படிக்கிறவர்களுக்கு பங்கு சந்தைக்கான பட்டம் அளிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு