திங்கள், 27 ஏப்ரல், 2015

விஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கதை - 2

காந்தி வரலாறு மட்டும் நமக்கு தெரிந்தால் போதாது. மல்லையா வரலாற்றையும் குடிமகன்கள் தெரிய வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் நாம் இந்த தொடரை எழுதி வருகிறோம். :):):)


அதனால் முந்தைய பாகத்தையும் படித்து இங்கு வருக..
விஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கதை - 1

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஆரம்ப கட்டத்தில் விஜய் மல்லையா இந்த அளவு விளையாட்டு பிள்ளையாக இருக்கவில்லை என்பது தான்.
இவரது முயற்சியால் தான் நிறுவனத்தின் மது வகைகள் உலக அளவில் புகழடைந்தன.

அவரது காலத்தில் தான் உள்நாட்டில் மட்டும் கொடி கட்டி பிறந்த வியாபாரத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வைத்தார்.

இன்றைய மதுவின் தேவை மிதமிஞ்சி விட்டது. அதனால் குறைந்த பட்சம் எண்ணையை போல் மதுவையும் இறக்குமதி செய்து நமது அந்நிய செலாவணி கூடாமல் இருக்க மல்லையாவும் காரணமாக இருந்தார் என்று நாம் வஞ்சப் புகழ்ச்சியாகக் கூட கூறிக் கொள்ளலாம்.

சென்னையில் இருந்த தலைமையகத்தை பெங்களுர் நகரத்திற்கு மாற்றினார்.

மது ஆராய்ச்சிக்கு என்று ஒரு தனி ஆய்வகத்தை பெங்களூரில் ஏற்படுத்தினார். அங்கு தரமான வேதியியல் ஆய்வுகள் நடந்தன.

இங்கு தயாரிக்கப்பட்ட மது வகைகளை வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தினார். அங்கும் சக்கை போடு போட மல்லையாவிற்கு கொண்டாட்டம் தான்.

லாபம் பெருக, பெருக United Distillers, Shaw Wallace, Phipson Distilley என்று பல வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கினார்.

அவற்றை ஒன்றிணைத்து United Sprits என்று தமது நிறுவனத்தின் பெயரை மாற்றினார்.

No.1 Rum, Signature, Black Dog என்ற அவர்களது பிராண்டுகள் இன்னும் குடிமகன்களிடம் பிரபலமாகவே உள்ளன. லாப விகிதம் அதே அளவிலே சென்று வருகிறது.
அதனால் சரிவு என்பது United Spirit நிறுவனத்திற்கு இது வரை வந்ததில்லை என்றே சொல்லலாம். ஆனால் விஜய் மல்லையா என்ற தனிப்பட்ட மனிதனுக்கே அதிக அளவில் சரிவு ஏற்பட்டது.

(இதனால் இந்த துறையில் இருக்கும் டாஸ்மார்க்கிற்கும் பாதிப்பு வராது என்பது எமது மற்றொரு அதீத நம்பிக்கை.  தமிழக அரசின் சேவை நம்பிக்கையுடன் தொடரலாம் )

அதற்கு அவர் சார்ந்த துறையும் ஒரு காரணம் என்றே கருதலாம். கேளிக்கை துறையில் இருப்பதால் சகல வசதிகள் எளிதில் கிடைத்தது. அதனால் ஆடம்பரத்தின் உச்ச கட்டத்திற்கே சென்றார் என்றும் சொல்லலாம்.

பெண்கள், மாளிகைகள், தீவுகள், பிக்னி காலேண்டர்கள் என்று அந்த கால ராஜாக்களின் அந்தப்புரத்தை இந்த காலத்தில் நினைவு படுத்தினார்.

ரொம்ப குறை சொல்வதற்கும் வழி இல்லை. எழுதும் நமக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் விடுவோமா என்பது சந்தேகமே. அதனால் பல் இருந்தவர் பக்கோடா சாபிட்டார் என்று எடுத்துக் கொள்வோம்.

ஆனால் மறுமுனையில் ஆடம்பரத்தின் திளைப்பில் வியாபரத்தை விட்டு விட்டார் என்று சொல்லலாம்.

அடுத்தக் கட்டத்திற்கு வியாபரத்தை அழைத்து செல்ல வேண்டிய புத்திர சீமான் அவரை மிஞ்சியனவாகவே இருந்தார். தகப்பன் இந்த பாடு படுகையிலும் புத்திரன் லண்டன் ரிசொர்ட்டில் உள்ளார் என்பது தான் பாயிண்ட்.

ஆடம்பரம் என்பதையும் தாண்டி அவரது ஒரு பெரிய தவறு என்னவென்றால் Kingfisher விமான நிறுவனம் தான்.

அடுத்த பாகத்தில் தொடர்கிறது..
விஜய் மல்லையாவின் விளையாட்டு சாம்ராஜ்யம் சரிந்த கதை - 3


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக