புதன், 29 ஏப்ரல், 2015

அமெரிக்க வட்டி விகிதம் மாற்றப்படவில்லை, தப்பிய சந்தை

இப்ப இருக்கும் சந்தையில் வீழ்ச்சி என்பதற்கு எதையும் காரணமாக சொல்லலாம்.


ஏனென்றால் ஒரு தெளிவான காரணம் யாருக்கும் தெரியாது. ஒரு குழம்பிய நிலை தான்

அப்படி வீழ்ச்சிக்கு கூறப்பட்ட ஒரு காரணங்களுள் ஒன்று அமெரிக்க வட்டி விகிதம் கூட்டப்படும் என்பதும்.



அவ்வாறு வட்டி கூட்டப்பட்டால் நமது FII முதலீட்டாளர்கள் அமெரிக்காவை பார்க்க சென்று விடுவோர்களோ என்றதொரு பயம் இருந்து வந்தது.

நல்ல வேளையாக கூட்டப்படவில்லை..

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அமெரிக்க வளர்ச்சி பெரிய அளவில் இல்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதனால் வட்டியை கூட்டி மக்களின் வாங்கும் சக்தியை குறைக்க வேண்டாம் என்று மத்திய வங்கி நினைத்து விட்டார்கள் போல.


அதனால் அப்படியே விட்டு விட்டார்கள்.

அநேகமாக செப்டம்பர் வரை இந்த நிலை நீடித்தாலும் ஆச்சர்யமில்லை.

ஒரு வேளையாக கூட்டப்பட்டு இருந்தால் இந்த நேரம் நமது சந்தை கடுமையாக துவைக்கப்பட்டு இருக்கும்.

ஆக, ஒரு பயம் விலகியது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக