வியாழன், 16 ஏப்ரல், 2015

சொல்லிக் கொள்ளும்படி இல்லாத TCS லாப அறிக்கை

இன்று TCS நிறுவனந்தின் நிதி அறிக்கை வெளியிடப்பட்டது.


ஏற்கனவே நாணய மாற்று விகிதம் காரணமாக லாபம் குறையும் என்று சொல்லி இருந்தார்கள்.

ஆனால் அதையும் தாண்டி வருமானத்தில் பெரிதளவு வளர்ச்சி ஒன்றும் காணப்படவில்லை.



கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில் வருமானம் 1.1.% குறைந்துள்ளது. லாபம் 29% குறைந்துள்ளது.

வருமானம் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 12% கூடி உள்ளது. லாபம் 27% குறைந்துள்ளது.

TCS பங்குச்சந்தைக்குள் நுழைந்து 10 வருடத்தை நிறைவு செய்ததால் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி உள்ளது. ஒவ்வொரு வருட சேவைக்கும் ஒரு வார சம்பளம் போனசாக வழங்கி உள்ளார்கள்.

இதனால்  2,600 கோடி ரூபாய் அதிகமாக செலவாகி உள்ளது.

இந்த தொகைய கழித்து பார்த்தால் லாபம் 11.5% வளர்ச்சி அடைந்துள்ளது.



பணியாளர் விலகல் சதவீதம் 14% என்று உயர்ந்துள்ளது. இதில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வளவு என்று தெரியவில்லை. (???)

ஆசியாவை தவிர மற்ற பகுதிகள் எதிர்மறை வளர்ச்சியையே கண்டுள்ளன.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Cloud Computing என்ற பிரிவு கணிசமான வளர்ச்சி அடைந்துள்ளது என்பது சாதகமான விடயம்.

மொத்தமாக பார்த்தால் ஒரு சராசரிக்கும் கீழான வளர்ச்சி உடைய நிதி அறிக்கை என்றே சொல்லலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக