வியாழன், 23 ஏப்ரல், 2015

விளம்பரங்களால் வாழும் கூகுள்

பல பேருக்கு கூகுள், பேஸ்புக் போன்ற இணைய தளங்கள் ஏன் இலவசமாகவே ஈமெயில், சமூக வலை தளங்கள் சேவையை வழங்குகின்றன என்று சந்தேகம் இருந்து இருக்கும்.


இலவசமாகவே வழங்கும் போது கூடவே வரும் விளம்பரங்கள் தான் அவர்கள் முக்கிய வருமான மூலங்கள்.



YOUTUBE பார்க்கும் போது இடையில் தொல்லை கொடுக்கும் விளம்பரங்கள் தான் கூகுள் நிறுவனத்தின் முக்கிய வருமானங்கள்.

இது தவிர, Adsense என்ற பெயரில் மற்ற தளங்களிலும் விளம்பர சேவை வழங்கி வருகிறது. அந்த விளம்பரங்களில் கிடைக்கும் வருமானத்தில் 40% வருமானத்தை கூகுள் எடுத்துக் கொண்டு விடும்.

இவ்வாறு விளம்பரத்திலே வாழ்ந்து வருகிறார்கள்.

நேற்று வெளியான அவர்களது நிதி முடிவுகள் மிக நன்றாக இருந்ததை ஓட்டி அமெரிக்க சந்தையில் 4% அளவு கூகுள் பங்கு விலை கூடியது.

நிதி அறிக்கையில் மொத்த வருமானம் 12% அளவு கூடி உள்ளது. விளம்பரங்களை கிளிக் செய்பவர்கள் 7% கூடி உள்ளார்கள்.

ஆனால் ஒவ்வொரு கிளிக்கிற்கும் கிடைத்த வருமானம் தான் குறைந்து உள்ளது. இதற்கு பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்கள் கிடைக்கும் கடுமையான போட்டியும் ஒரு காரணம்.

அதிக அளவிலான இன்டர்நெட் பயன்படுத்துவோர் மொபைலுக்கு மாறி உள்ளனர். அதில் கூகுள் பிரகாசிக்காமல் உள்ளது தான் சிறிது கவலைக்குரிய விடயமாக உள்ளது.

மற்றபடி, சர்வதேச சந்தையில் கண்ணை மூடி முதலீடு செய்யும் பங்காகவே இன்னும் கூகுள் உள்ளது.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக